Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank

ஜோதிடம்

சிறுவர் தின நிகழ்வுகள்!

Oct 1, 2026 - 11:46 AM -

0

சிறுவர் தின நிகழ்வுகள்!

சர்வதேச மற்றும் தேசிய சிறுவர் தினத்தை முன்னிட்டு நுவரெலியா விக்டோரியா பூங்கா மற்றும் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் விசேட கொண்டாட்ட நிகழ்வுகள் இன்று (01) சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தன. 

நுவரெலியாவில் விக்டோரியா பூங்காவில் அமைந்துள்ள சமாதான மரத்திற்கு அருகில் நகர எல்லைக்குட்பட்ட முன்பள்ளி சிறார்களை ஒன்றிணைத்து சிறுவர் தினக் கொண்டாட்டம் நடைபெற்றது. 

பெரியவர்களை வரவேற்பதற்குப் பதிலாக, இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஒவ்வொரு முன்பள்ளி சிறாருக்கும் அழைக்கப்பட்ட விருந்தினர்களால் மலர்கள் வழங்கப்பட்டு அன்போடு வரவேற்பளிக்கப்பட்டமை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. சிறார்கள் சமூகத்தின் மிகப்பலமிக்க வளம் என்பதை அடையாளப்படுத்தும் வகையிலேயே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் சிறுவர்களின் கலை, கலாசார மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், விருந்துபசாரமும் வழங்கப்பட்டது. இதில் நுவரெலியா மாநகர சபை மேயர் உபாலி வணிகசேகர, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமரகோன் பண்டா, பிரதி மேயர் சிவன்ஜோதி யோகராஜா, மக்கள் வங்கியின் பிராந்திய முகாமையாளர் சுதீர ஜயசிங்க உள்ளிட்ட பல அரச அதிகாரிகளும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர். 

இலங்கை அரசாங்கம் 2026 செப்டம்பர் 25 முதல் ஒக்டோபர் 01 வரை “தேசிய சிறுவர் தின வாரமாக” அறிவித்துள்ள நிலையில், சிறுவர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்நிகழ்வு அமைந்திருந்தது. 

இதேவேளை, யாழ்/வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியிலும் கல்லூரி முதல்வர் சி.தனஞ்சயன் தலைமையில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு இனிதே நடைபெற்றது. 

இதன்போது, சிறுவர்களுக்கான உரிமைகள், வன்முறைகளிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது மற்றும் எதிர்காலத்தில் நல்ல பிரஜையாக மிளிர்வது குறித்த விழிப்புணர்வு விளக்கவுரையை கல்லூரி முதல்வர் வழங்கினார். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், சிறுவர் தின உறுதிமொழி ஏற்பு என்பன இடம்பெற்றதுடன், மாணவர்களுக்குக் கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

MOST READ

காணொளி
அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

சிறுவர் தின நிகழ்வுகள்!

சிறுவர் தின நிகழ்வுகள்!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

உலக சுற்றுலா தினம்!

உலக சுற்றுலா தினம்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

இலங்கை ரசிகர்களுக்கு  சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

இலங்கை ரசிகர்களுக்கு சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

Mobitel 1278

ஷோர்ட்ஸ்
மன்னார் மடு தேவாலய வீதியில் உலாவும் 2 சிறுத்தை புலிகள்!

மன்னார் மடு தேவாலய வீதியில் உலாவும் 2 சிறுத்தை புலிகள்!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

வட்டவளையில் சிறுத்தை புலி நடமாட்டம்!

வட்டவளையில் சிறுத்தை புலி நடமாட்டம்!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

விஜயன் அரசு கூட இந்தியாவில் இருந்துதானே வந்தது!

விஜயன் அரசு கூட இந்தியாவில் இருந்துதானே வந்தது!

தமிழ் பேசும் மக்கள் யாரும் அனோஜனுக்கு ஏதிராக இல்லை!

தமிழ் பேசும் மக்கள் யாரும் அனோஜனுக்கு ஏதிராக இல்லை!

அனோஜனை மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறோம்!

அனோஜனை மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறோம்!

அரசியல் கைதிகளின் வழக்குகள் துரிதப்படுத்தப்படுமா?

அரசியல் கைதிகளின் வழக்குகள் துரிதப்படுத்தப்படுமா?