Oct 1, 2026 - 11:49 PM

கடந்த இரண்டு மாதங்களில் போதைப்பொருள் தொடர்பாக 17,506 இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
குருவிட்ட சிறைச்சாலையில் ஒருங்கிணைந்த பொறிமுறையை நிறுவும் நிகழ்வில் இன்று (01) முற்பகல் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
இதற்கமைய ௐகஸ்ட் மாதத்தில் 9,061 அறிக்கைகளும், செப்டம்பர் மாதத்தில் 8,445 அறிக்கைகளும் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை நெரிசலைக் குறைப்பதற்காக இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கைகளை விரைவுபடுத்தவும், சமூக சீர்திருத்தச் சட்டம் உள்ளிட்ட தேவையான சட்டங்களைத் திருத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அங்கு சுட்டிக்காட்டினார்.
கடந்த காலத்தில் சிறைச்சாலைகளுக்குள் ஏற்பட்ட சம்பவங்கள் தானாக உருவானவை அல்ல என்றும், சில சம்பவங்கள் வெளிவாரித் தாக்கங்களினாலும், வேறு சில சம்பவங்கள் உள்வாரி காரணங்களினாலும் இடம்பெற்றதாகவும் அவர் கூறினார்.































