Oct 15, 2026 - 04:28 PM

சிறை தண்டனை அனுபவித்து வரும் கலகொடஅத்தே ஞானசார தேரரை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறும், தேரர்களின் மத உரிமைகளையும் வலயுறுத்தியும் முன்னெடுக்கப்பட்டு வரும் நடைபேரணி இன்று (15) கொழும்பை வந்தடைந்துள்ளது.
அதற்கமைய, இந்த நடைபேரணி தற்போது ஜனாதிபதி செயலகத்தை நோக்கிச் பயணித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தலதா மாளிகையின் வளாகத்தில் அமைந்துள்ள வாரியபொல சுமங்கல தேரரின் உருவச்சிலைக்கு முன்பாக கடந்த 10ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த நடைபேரணி இன்று கொழும்பில் நிறைவடையவுள்ளது.
இதன்காரணமாக ஜனாதிபதி செயலக வளாகத்தில் பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
































