Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
அடிக்கல் நாட்டும் நிகழ்வு

அடிக்கல் நாட்டும் நிகழ்வு

செல்வராசா கஜேந்திரன் - அர்ச்சுனா இடையே காரசார விவாதம்!

செல்வராசா கஜேந்திரன் - அர்ச்சுனா இடையே காரசார விவாதம்!

வீதிப் போக்குவரத்து நெருக்கடி!

வீதிப் போக்குவரத்து நெருக்கடி!

நன்றி கூறிய பிரதியமைச்சர்!

நன்றி கூறிய பிரதியமைச்சர்!

வீட்டின் நுழைவாயிலை உடைத்து சேதம்!

வீட்டின் நுழைவாயிலை உடைத்து சேதம்!

பொதுமக்கள் பெரும் அசௌகரியம்!

பொதுமக்கள் பெரும் அசௌகரியம்!

எதிர்க்கட்சிகள் மீது அமைச்சர் கடும் சாடல்!

எதிர்க்கட்சிகள் மீது அமைச்சர் கடும் சாடல்!

பனை ஒரு சாதாரண பயிர் கிடையாது!

பனை ஒரு சாதாரண பயிர் கிடையாது!

இரண்டு முச்சக்கரவண்டிகளின் சாரதிகளும் கைது!

இரண்டு முச்சக்கரவண்டிகளின் சாரதிகளும் கைது!

மயிலத்தமடு மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்பு

மயிலத்தமடு மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்பு

இது முஸ்லிம்களுக்கு எதிரான வழக்கல்ல...

இது முஸ்லிம்களுக்கு எதிரான வழக்கல்ல...

பாதுகாப்பான பணிச்சூழல் கோரி...

பாதுகாப்பான பணிச்சூழல் கோரி...

சாரதியின் கவனக்குறைவால் இடம்பெற்ற லொறி விபத்து!

சாரதியின் கவனக்குறைவால் இடம்பெற்ற லொறி விபத்து!

கண்டி - தெல்தோட்டை பிரதான வீதியில் சீறிப்பாய்ந்த வெள்ளம்

கண்டி - தெல்தோட்டை பிரதான வீதியில் சீறிப்பாய்ந்த வெள்ளம்

எல்பியன் தோட்டத்தில் 25 வீடுகளின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

எல்பியன் தோட்டத்தில் 25 வீடுகளின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

    Mobitel Inner 1278

    இந்தப் புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, மும்பையில் உள்ள வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகத்துக்கு விவகாரம் அனுப்பப்பட்டது. இதையடுத்து, இம்ரான் கானை இந்தியாவை விட்டு வெளியேறுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


    பாலிவுட் நடிகர் இம்ரான் கானை அக்டோபர் 28 ஆம் திகதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு மும்பை பொலிஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி மும்பையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


    பாலிவுட் நடிகர் அமீர்கானின் உறவினரான இம்ரான் கான், அமெரிக்க குடியுரிமை பெற்றவர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வெளிநாட்டு குடிமக்களுக்கு வழங்கப்படும் ஓசிஐ கார்டு இவர் பெற்றுள்ளார். இந்த நிலையில், இம்ரான் கான் கடந்த 10 ஆம் திகதி மும்பையில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்தில் பங்கேற்றார்.


    ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு அனுமதி பெறப்படவில்லை என்று கூறிய பொலிஸார், அங்கு திரண்டவர்களைத் தடுத்து நிறுத்தினர். நடிகர் இம்ரான் கான் உள்பட நூற்றுக்கணக்கானோர் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டனர்.


    இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கிரித் சோமையா மும்பை பொலிஸாரிடம் புகார் அளித்தார். அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ள இம்ரான் கான், இந்தியாவில் அரசியல் போராட்டத்தில் பங்கேற்கலாமா? அவரது ஓசிஐ அட்டை தொடர்பான விதிகள் மற்றும் குடியேற்ற விதிமுறைகள் மீறப்பட்டுள்ளனவா? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார்.


    இந்தப் புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, மும்பையில் உள்ள வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகத்துக்கு விவகாரம் அனுப்பப்பட்டது. இதையடுத்து, இம்ரான் கானை இந்தியாவை விட்டு வெளியேறுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்படி, அக்டோபர் 28 ஆம் திகதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு இம்ரான் கானுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


    அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நிர்வாக நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போராட்டத்தில் பங்கேற்றது தொடர்பாக இம்ரான் கானுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருப்பது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.