Oct 20, 2026 - 11:18 AM
By கிளிநொச்சி நிருபர் சப்தன்
By கிளிநொச்சி நிருபர் சப்தன்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட கள்ளியடி பகுதியில் உள்ள பேராற்றில் நண்பர்களுடன் நீராடச் சென்ற 20 வயதுடைய இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் கடந்த 17 ஆம் திகதி மாலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
நீரில் மூழ்கிய இளைஞனின் சடலம் மீட்கப்பட்டு, புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
































