Oct 20, 2026 - 10:49 AM
By யாழ். நிருபர் பிரதீபன்
By யாழ். நிருபர் பிரதீபன்

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி கோவிலில் மானம்பூ உற்சவம் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
நவராத்திரி விரதத்தின் இறுதி நாளான இன்று (20) காலை இந்த உற்சவம் நடைபெற்றது.
இதன்போது, காலை 6.45 மணிக்கு வசந்த மண்டபப் பூசை இடம்பெற்று, குதிரை வாகனத்தில் முருகப்பெருமான் முத்துக்குமார சுவாமியாக எழுந்தருளி வெளிவீதி உலா வந்த மானம்பூ உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானின் அருட்காட்சியைக் கண்டு களித்தனர்.
































