Oct 20, 2026 - 10:54 AM

இந்திய அணியின் விக்கெட் காப்பாளர் - துடுப்பாட்டவீரருமான சஞ்சு சாம்சன், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள 'ஜெயிலர் 2' திரைப்படத்தைக் காண்பதற்காக முழு திரையரங்கையும் முழுமையாக முன்பதிவு செய்துள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.
தனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் தன்னுடன் விளையாடும் இந்திய அணியின் சில வீரர்களுடன் இணைந்து திரைப்படத்தைக் காணும் நோக்கில் நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான அவர் இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளார்.
ரஜினிகாந்தின் திரைப்படங்களை எப்போதுமே விரும்பிப் பார்ப்பதாகவும், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் காரணமாக முதல் நாளில் படத்தை பார்க்க முடியாவிட்டாலும், இன்று தனது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பெரிய திரையில் 'தலைவர்' திரைப்படத்தைக் காண்பதில் மிகுந்த உற்சாகமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய அணியில் தமிழ் மொழியறிந்த சில வீரர்களும் மற்றும் ஆதரவுப் பணியாளர்களும் இந்த சிறப்புக் காட்சியில் தன்னுடன் கலந்துகொள்ள உள்ளதாகவும் சஞ்சு சாம்சன் குறிப்பிட்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான 'ஜெயிலர்' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள இந்தப் படம், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் பேராதரவுடன் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்து வெற்றிகரமாக திரையிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
































