Oct 20, 2026 - 11:46 AM

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தனது இயல்பான நடிப்பால் முத்திரை பதித்து வருபவர் நடிகை தேவதர்ஷினி.
குணச்சித்திர, நகைச்சுவை என எப்போதும் அமைதியான, எதார்த்தமான கதாபாத்திரங்களில் பார்த்து பழகிய தேவதர்ஷினியின் வீடியோ ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி பெரும் விவாதத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ராகவ் மிர்தாத் இயக்கத்தில் ஹாரர், ஃபேண்டஸி மற்றும் சயின்ஸ்-ஃபிக்ஷன் பாணியில் உருவான 'டிரோன்ஸ்' திரைப்படம் அக்டோபர் 16 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படத்தில் தேவதர்ஷினி இதுவரை பார்த்திராத வகையில், தனது மாயக் கோட்டைக்குள் மனிதர்களை அடைத்து பொம்மைகளாக மாற்றி சித்திரவதை செய்யும் சூனியக்காரி கிழவியாக நடித்து இருக்கிறார்.
'ஜெயிலர் 2' படத்தின் கடுமையான போட்டிக்கு மத்தியிலும், தேவதர்ஷினியின் இந்த வித்தியாசமான சூனியக்காரி கதாபாத்திரம் மற்றும் படத்திற்குப் நல்ல விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
டிரோன்ஸ் படத்தின் பாராட்டுக்கள் ஒருபுறம் இருக்க, இணையத்தில் தேவதர்ஷினி பெண் ஒருவருடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சி ஒன்று திடீரென லீக்காகி காட்டுத்தீ போல பரவி வருகிறது. தேவதர்ஷினியா இது? இப்படியெல்லாம் கூடவா நடித்திருக்கிறார்? என்றும், அவர் லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளாரா என்றும் நெட்டிசன்கள் பலரும் அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
இந்த வைரல் வீடியோ குறித்த உண்மை தகவல் தற்போது வெளியாகியுள்ளது. வைரலாகும் அந்த வீடியோ காட்சி ஜீ தமிழ் தளத்தில் வெளியான 'ஐந்தாம் வேதம்' என்ற ஹிட் வெப் தொடரில் இடம்பெற்ற ஒரு காட்சியாகும். இத்தொடரில் அவர் 'கேதகி' என்ற அழுத்தமான வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் தேவதர்ஷினி நடித்திருந்தார்.
அந்தத் தொடரின் கதைக்களத்தின் சூழலுக்கு ஏற்ப எடுக்கப்பட்ட ஒரு காட்சியை தவறாக வெட்டி எடுத்து, அவர் லெஸ்பியனாக நடித்துவிட்டார் என சோஷியல் மீடியாவில் தவறான வதந்தியை பரப்பியுள்ளது அம்பலமாகியுள்ளது. வெப் தொடரை பார்த்த நெட்டிசன்கள் பலரும், அவர் லெஸ்பியனாக நடிக்கவில்லை. கதையை தெரிந்து கொண்டு பேசுங்கள் என வதந்தி பரப்பியவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
































