Oct 21, 2026 - 03:57 PM

தமிழ் சினிமாவில் ரஜினி - கமல், விஜய் - அஜித் படங்களுக்கு என்று தனி வரவேற்பு இருக்கும்.
அப்படி ரசிகர்கள் கொண்டாடும் வகையில் கடந்த அக்டோபர் 15 ஆம் திகதி வெளியானது நடிகர் ரஜினியின் ஜெயிலர் 2 திரைப்படம்.
முதல் பாகத்தை விட இந்த இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. ஆயுதபூஜை, விஜயதசமி விடுமுறை நாட்கள் என்பதால் ஜெயிலர் 2 படத்திற்கு பட்டய கிளப்பும் விமர்சனங்கள் வந்துள்ளன.
இந்தியாவை தாண்டி வெளிநாடுகளிலும் ஜெயிலர் 2 படத்திற்கு சூப்பர் ரெஸ்பான்ஸ். மக்கள் ஆதரவு கொடுத்து வந்த நிலையில் வெளிநாட்டில் இப்போது ஜெயிலர் 2 பட காட்சிகள் இரத்து செய்யப்பட்டுள்ளது.
அதாவது கனடாவில் விநியோகஸ்தர்களுக்கும் சிலருக்கு பண பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் நாளை (22) முதல் ஜெயிலர் 2 பட காட்சிகள் அங்கு இரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் கனடாவில் ரஜினி ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
































