Oct 21, 2026 - 04:21 PM

Siemens Healthineers இன் Deep Resolve செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் கூடிய இலங்கையின் முதலாவது MRI தொழில்நுட்பமானது, இலங்கையில் நோயறிதல் புகைப்படவியல் துறையில் புதிய தேசிய மைல்கல்லை அமைப்பதுடன், இதுவரை நாட்டில் இல்லாத அளவிலான திறனை நாட்டுக்கு கொண்டுவந்து, இலங்கையின் சுகாதாரத் தரத்தை மேலும் உயர்த்துவதற்கான மற்றுமொரு அடியை எடுத்து வைக்கிறது.
தலவத்துகொடையில் உள்ள Hemas Capital Hospital ஆனது Siemens Healthineers MAGNETOM Sola 1.5T இயந்திரத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம், ஹேமாஸ் மருத்துவமனை ஒரு புதிய ரக MRI தொழில்நுட்பத்தை இலங்கைக்கு கொண்டு வந்துள்ளது. நோயாளியை மையமாகக் கொண்ட, மேம்பட்ட MRI புகைப்படவியலில் உலகளாவிய தரநிலையாகக் கருதப்படும் இந்த இயந்திரமானது, நவீன நோயறிதல் புகைப்படவியலில் முன்னணியில் உள்ள திறன்களை இலங்கை மக்கள் இலகுவாக பெறக் கூடியதாக மாற்றுகிறது.
Siemens Healthineers நிறுவனத்தின் Deep Resolve ஆனது, AI அடிப்படையிலான புகைப்பட மறுசீரமைப்புத் தொழில்நுட்பத்தை (image reconstruction technology) கொண்ட இலங்கையின் முதலாவது MRI இயந்திரமாக திகழ்கிறது. இது செயற்கை நுண்ணறிவு, மேம்பட்ட புகைப்படத் தரம், வேகம், நோயாளியின் சௌகரியம் ஆகியவற்றை உள்ளடக்கிய அனைத்தையும் கொண்ட ஒரு கலவையை அறிமுகப்படுத்துகிறது. இதுவரை நாட்டில் கிடைக்கப் பெறாத ஒரு விடயமாக இது அமைகிறது.
இது MRI திறனில் ஏற்பட்டுள்ள ஒரு சாதாரணமான மேம்படுத்தல் அல்ல, மாறாக ஒரு முக்கிய தொழில்நுட்பத்தை நோக்கிய பாரிய அடியெடுத்து வைப்பாகும். அத்துடன், இலங்கையில் நோயறிதல் புகைப்படவியலிற்கான ஒரு புதிய தேசிய அத்தியாயத்தையும் குறிக்கிறது.
ஹேமாஸ் மருத்துவமனையின் பயணத்தில் இது ஒரு முக்கியமான மைல்கல்லாகும். மேம்பட்ட மருத்துவத் தொழில்நுட்பம், மருத்துவ திறன் மற்றும் சுகாதார உட்கட்டமைப்பு ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான முதலீடானது, வைத்தியசாலையின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான ஒரு முக்கியமான விடயம் மாத்திரமன்றி, இலங்கை முழுவதும் சுகாதார பராமரிப்புத் தரத்தை மேம்படுத்தவும், உள்ளூரில் உலகத்தரம் வாய்ந்த திறன்களை இலகுவாக அணுகுவதற்கான வாய்ப்பை விரிவுபடுத்தவும், ஆரோக்கியமான ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பொறுப்பான ஒரு தனியார் சுகாதாரத்துறை முதலீடு வகிக்கக்கூடிய அர்த்தமுள்ள பாத்திரத்தை நிரூபிப்பதற்கான நோக்கத்தையும் இது வெளிப்படுத்துகின்றது.
இலங்கைக்கு மாறுபட்ட மட்டத்தில் அமைந்த MRI
ஒரு பரிசோதனையின் பின்னணியில் உள்ள இயந்திரத்தின் அதிநவீன தன்மையானது, அதிலிருந்து பெறப்படும் புகைப்படவியலின் தரம், ஸ்கேன் செய்து முடிப்பதற்கு தேவைப்படும் நேரம், நோயாளியின் சௌகரியம் மற்றும் அனுபவம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த பாதுகாப்பு ஆகியவற்றில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. MAGNETOM Sola இயந்திரமானது, உலகளாவிய புகைப்படவியல் தொடர்பான புத்தாக்க கண்டுபிடிப்புகளின் முன்னணியில் உள்ள தொழில்நுட்பத்தை கொண்ட ஒரு MRI இயந்திரத்தை இலங்கைக்கு கொண்டு வருகிறது.
இதன் Deep Resolve தொழில்நுட்பமானது, புகைப்பட மறுசீரமைப்பின் போது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, கணிசமான அளவில், குறுகிய பரிசோதனை நேரத்தில் மிகவும் விரிவான புகைப்படங்களை உருவாக்குகிறது. Siemens Healthineers நிறுவனத்தின் கருத்திற்கு அமைய, Deep Resolve மூலம் மறுசீரமைக்கப்பட்ட ஒரு மூளையின் ஸ்கேன் ஆனது, வழக்கமான ஸ்கேன் நேரத்துடன் ஒப்பிடுகையில் அண்ணளவாக அரைவாசி நேரத்திலேயே நிறைவு செய்ய முடியும் என்பதுடன், அது இரு மடங்கு தெளிவுத்திறனையும் கொண்டதாகவும் அமைகிறது.
இலங்கையிலுள்ள நோயாளர்களுக்கு, இதுவரையில் உள்ளூரில் கிடைக்காத ஸ்கேனிங் புகைப்படவியல் திறனை இலகுவாக அணுக முடியும் என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. பரிசோதனையின் போது இதன் நன்மைகள் உடனடியாக உணரப்படுகின்றன. ஸ்கேன் செய்வதற்கு குறுகிய நேரம் எடுப்பதானது, MRI இயந்திரத்தினுள் இருக்கும் நேரம் குறைவு என்பதைக் காட்டுகிற்து. இது ஒரு வகை கவலை அல்லது மூடிய இடம் தொடர்பான பீதி (claustrophobia) உள்ள நோயாளர்கள் மற்றும் முதியவர்கள், சிறுவர்கள் மற்றும் நீண்ட நேரம் அசையாமல் இருப்பதில் கடினத்தை உணரும் நோயாளர்கள் எதிர்நோக்கும் அனுபவத்தை எளிதாக்குகிறது.
முழுமையான முழங்கால் பகுதி பரிசோதனை ஒன்றிற்கு சுமார் மூன்று நிமிட நேர ஸ்கேன் நேரமே எடுக்கும் அதே நேரத்தில், பித்த நாள பரிசோதனைகளை 13 செக்கன் போன்ற ஒரே மூச்சில் செய்து முடிக்க முடியும். இந்த கட்டமைப்பானது, மேம்பட்ட இதய MRI உள்ளிட்ட அதிநவீன பயன்பாடுகளுக்கும் உதவுகிறது. இது Hemas Capital Hospital இல் கிடைக்கும் நோயறிதல் திறன்களை மேலும் விரிவுபடுத்த உதவுகிறது.
இதன் அறிமுகத்தின் மூலம், இலங்கையில் ஒரு MRI அனுபவம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கான தரநிலையை ஹேமாஸ் மருத்துவமனை மேம்படுத்துகிறது. வீட்டிற்கு அருகிலேயே உலகளாவிய முன்னணி சுகாதாரத் தரத்திற்கான அணுகல் இந்த முதலீட்டின் முக்கியத்துவமானது, நோயறிதல் புகைப்படவியலிற்கும் அப்பால் பரந்துபட்டதாக அமைகிறது. ஹேமாஸ் மருத்துவமனைக்கு, இந்த புதிய MRI ஆனது, சர்வதேச ரீதியில் முன்னணியில் உள்ள சுகாதார நிறுவனங்களில் காணப்படும் தொழில்நுட்பம் மற்றும் திறன்களுக்கு இணையான சுகாதார தொழில்நுட்பங்கள் மற்றும் திறன்களை இலங்கையில் உள்ள நோயாளர்கள் அணுகுவதை உறுதி செய்வதற்கான ஒரு பரந்த இலட்சியத்தைப் பிரதிபலிக்கிறது.
நோயாளிகள் சுகாதாரப் பராமரிப்பில் புதிய முன்னேற்றங்களை இலங்கைக்கு வெளியே தேடுவதற்கான அவசியத்தை இல்லாமல் செய்து, அத்திறன்களை வீட்டிற்கு அருகில் கொண்டு வர ஹேமாஸ் முதலீடுகளை செய்து வருகிறது. இதற்கான ஒரு அடுத்த கட்ட நகர்வாக, தலவத்துகொடையில் உள்ள MRI இயந்திரமானது அமைகிறது. ஹேமாஸ் மருத்துவமனை எதிர்கால வளர்ச்சிக்குத் தயாராகும் வகையில் அதன் மருத்துவத் திறன்கள், தொழில்நுட்பம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை தொடர்ச்சியாக வலுப்படுத்தி வருகிறது. இது வெறுமனே தமது திறன்களை அதிகரிப்பதில் மட்டுமல்லாமல், நாட்டில் கிடைக்கக் கூடிய சுகாதாரத் தரத்தை படிப்படியாக உயர்த்துவதற்கான கவனத்தையும் மையப்படுத்தியாக உள்ளது. மேம்பட்ட மருத்துவத் தொழில்நுட்பம், வலுவான மருத்துவ நிபுணத்துவம் மற்றும் நோயாளிக்கான சிறந்த அனுபவம் ஆகியவற்றை ஒன்றிணைப்பதை மையமாகக் கொண்டு நிறுவனத்தின் அணுகுமுறை அமைந்துள்ளது.
இவ்வாறு செய்வதன் மூலம், ஒரு ஆரோக்கியமான தேசத்திற்கு பங்களிப்பதை ஹேமாஸ் நோக்கமாகக் கொண்டுள்ள அதே வேளையில், இலங்கை சர்வதேச ரீதியில் மிகயுயர்ந்த சுகாதாரத் தரநிலைகளை இலகுவாக அடைவதற்கும் உதவுகிறது.
மிகப் பெரும் அத்தியாயத்தின் ஆரம்பம்
ஹேமாஸ் மருத்துவமனையின் பரிணாம வளர்ச்சியில் ஒரு முக்கியமான கட்டத்தில் இந்த MRI அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிறுவனம் தனது அடுத்த கட்ட வளர்ச்சியில் காலடி எடுத்து வைக்கும் நிலையில், சுகாதார உட்கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் மருத்துவத் திறன் ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் மேலதிக முதலீடுகள், இன்று உருவாக்கப்படும் அடித்தளத்தை மேலும் வலுப்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, இந்த புதிய MRI இயந்திரமானது ஹேமாஸ் மருத்துவமனை நகர்ந்து வரும் திசை சரியானது என்பதற்கான முக்கியமான உதாரணங்களில் ஒன்றை பிரதிபலிக்கிறது. இது எமது நாட்டிற்குள் கிடைக்கும் சுகாதார சேவைத் திறன்களை வலுப்படுத்துதல், மேம்பட்ட சுகாதார பராமரிப்புக்கான இலகுவான அணுகலை உருவாக்குதல், எதிர்காலத்தில் நோயாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யக்கூடிய சுகாதார சூழல்களை கட்டியெழுப்புதல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஒரு பயணமாகும். செயற்கை நுண்ணறிவானது, இப்பயணத்திற்கு அதிக ஆதரவை வழங்கும் ஒரு அம்சமாகும். புதிய MRI தொகுதிக்குள், ஏற்கனவே புகைப்பட மறுசீரமைப்பு மற்றும் பரிசோதனை மேம்பாடு போன்ற விடயங்களில் AI செயற்பட்டு வருகிறது. இது மருத்துவர்கள் மற்றும் நோயாளர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் நடைமுறை ரீதியாக தொழில்நுட்பம் ஆதரவளிக்க அதிகாரமளிக்கிறது.
ஆயினும், ஹேமாஸ் வைத்தியசாலையை பொறுத்தவரை, தொழில்நுட்பமானது சிறந்த நோயறிதல்கள், சிறந்த அனுபவங்கள், உயர்தர சுகாதாரப் பராமரிப்பு போன்ற, அது எதைச் சாத்தியமாக்குகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டே இறுதியாக மதிப்புமிக்கதாக மாறுகிறது. இது குறித்து, Hemas Hospitals மற்றும் நோயறிதல் வலையமைப்பின் முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி லக்கித் பீரிஸ் தெரிவிக்கையில்,
இது ஹேமாஸ் மருத்துவமனைக்கு மாத்திரமல்லாது, இலங்கையில் MRI புகைப்படவியல் துறைக்கே ஒரு முக்கிய முன்னேற்றமாகும். இதுவரை கிடைக்கப் பெறாத ஒரு திறனை நாம் நாட்டிற்குள் கொண்டு வந்துள்ளோம். அத்துடன் நவீன நோயறிதல் புகைப்படவியலின் முன்னணியில் காணப்படும் தொழில்நுட்பத்தை எமது நோயாளிகளுக்கு அணுகக்கூடியதாக மாற்றுகிறோம்.” என்றார். அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச ரீதியில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் காணப்படும் சுகாதாரத் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவத் திறன்களுக்கு இணையான வசதிகளை இலங்கை நோயாளிகள் இலகுவாக பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே எமது இலட்சியமாகும். உலகத்தரம் வாய்ந்த சுகாதாரப் பராமரிப்பு மற்றும் சிறந்த சுகாதார நடைமுறைகளை அவர்கள் இலங்கைக்கு வெளியே தேட வேண்டியதில்லை.” என்றார்.
இந்த MRI ஆனது, ஒரு முக்கியமான மைல்கல்லாகும். ஆனால் இது ஹேமாஸ் மருத்துவமனையின் முக்கிய பயணத்தின் ஆரம்பமாகும். எமது அடுத்த கட்ட வளர்ச்சியில் நாம் காலடி எடுத்து வைக்கும் நிலையில், சுகாதாரத் தரத்தை உயர்த்தவும், ஆரோக்கியமான இலங்கையை கட்டியெழுப்புவதற்கு பங்களிக்கவும் தொழில்நுட்பம், உட்கட்டமைப்பு மற்றும் மருத்துவத் திறனில் நாம் தொடர்ந்தும் முதலீடு செய்வோம். என அவர் உறுதியளித்தார்.
இது குறித்து, Hemas Capital Hospital Pvt Ltd பணிப்பாளரும் பொது முகாமையாளருமான கலாநிதி பிரதீப் எட்வர்ட் தெரிவிக்கையில், இந்தத் தொழில்நுட்பத்தை தனித்துப்படுத்துவது, இயந்திரத்தால் என்ன செய்ய முடியும் என்பதற்கு அப்பால், அது நோயாளிக்கு எவ்வாறான நன்மையைத் தருகிறது என்பதாகும். மிகவும் மேம்பட்ட புகைப்படவியலை, வேகமான பரிசோதனைகள் மற்றும் மிகவும் வசதியான சிறந்த அனுபவத்துடன் ஒன்றிணைக்க இது எமக்கு வாய்ப்பளிக்கிறது.” என்றார்.
Hemas Capital Hospital இல் MRI பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் நோயாளிகளுக்கு, இலங்கை இதுவரை அனுபவித்திராத ஒரு தொழில்நுட்பத் தரத்திற்கான அணுகலை வழங்குகிறது. என அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், சிறந்த பராமரிப்புத் தரத்தை வழங்குவதற்காக கிடைக்கும் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் சிறந்த மருத்துவ நிபுணத்துவத்தையும் ஒன்றிணைத்து, சுகாதாரப் பராமரிப்பை ஹேமாஸ் வைத்தியசாலையில் மேம்பட்டதாக தொடர்ச்சியாக கொண்டு செல்வதற்காக நாம் பயணிக்க விரும்பும் திசை இதுவேயாகும். என்றார்.
Siemens Healthineers MAGNETOM Sola இன் அறிமுகமானது, இலங்கையில் MRI துறைக்கு ஒரு புதிய அத்தியாயத்தையும் ஹேமாஸ் மருத்துவமனைக்கு பரந்த முன்னேற்ற காலத்திற்கான ஒரு தொடக்கத்தையும் குறிக்கிறது. ஹேமாஸ் தனது எதிர்காலத்திற்காக தொடர்ச்சியாக முதலீடு செய்து வரும் நிலையில், உலகளாவிய ரீதியில் சுகாதாரப் பராமரிப்பை வடிவமைக்கும் தரநிலைகள், திறன்கள் மற்றும் தொழில்நுட்பங்களை இலங்கை நோயாளிகளுக்கு மிக அருகில் கொண்டு சேர்த்தல் என்பதில், அதன் நோக்கம் தெளிவாக உள்ளது.
Siemens Healthineers MAGNETOM Sola 1.5T MRI தற்போது தலவத்துகொடையில் உள்ள Hemas Capital Hospital இல் கிடைக்கிறது. முன்பதிவுகள் மற்றும் விபரங்களுக்கு: 0776638942
































