Oct 21, 2026 - 04:27 PM

ஆர்.ஜே.பாலாஜி, நயன்தாராவை வைத்து இயக்கி, நடித்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான இப்படம் ஒரு முக்கிய விஷயத்தை பற்றி பேசப்பட்டது.
அப்படத்தை தொடர்ந்து கடந்த வருடம் மூக்குத்தி அம்மன் 2 ஆம் பாகம் தயாராக இருப்பதாக அறிவிப்பு வந்தது, ஆனால் இந்த புதிய படத்தை சுந்தர்.சி இயக்க நயன்தாரா, ரெஜினா என பலர் நடிக்க உருவாவதாக அறிவிக்கப்பட்டது.
தற்போது படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் நடந்துவரும் நிலையில் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் டிரைலர் World Of Mahasakthi என்ற பெயரோடு வெளியாகியுள்ளது.
இந்த டிரைலரில் சரியாக 1 நிமிடம் 7 விநாடிகளில் தமிழக முதலமைச்சர் விஜய்யின் அரசியல் reference போல் காட்சி ஒன்று வருவதை கண்டு ரசிகர்கள் இது விஜய் கட்சியின் reference ஆக தான் இருக்கும் என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இதோ டிரைலர்,
































