Oct 21, 2026 - 10:12 PM

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 'பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தை' சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான வாய்மொழி சமர்ப்பணங்கள் இன்று (21) உயர்நீதிமன்றத்தில் நிறைவடைந்தன.
இந்த வழக்குகளுக்குரிய எழுத்துப்பூர்வ சமர்ப்பணங்கள் ஏதேனும் இருப்பின், அவற்றை எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டுள்ளது.
அதன் பின்னர், இந்தச் சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை குறித்த உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் பாராளுமன்றத்தின் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
































