Oct 27, 2026 - 03:20 PM

கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்கும் மூலோபாயத் தொடர்பாடல் மற்றும் மக்கள் தொடர்பு நிறுவனமான மார்க் அன்ட் கொம் [பிரைவேட்]லிமிடெட் [Mark and Comm (Pvt) Ltd], 2026 ஒக்டோபர் 12ஆம் திகதி முதல் ருவான் திலின சமரசிங்கவை ஊடகம் மற்றும் மக்கள் நலன் சார்ந்த விடயங்களுக்கான ஆலோசனைப் பணிப்பாளராக நியமித்துள்ளது.
திலின சமரசிங்க ஊடகவியல், ஊடக உறவுகள் மற்று,ம் மூலோபாயத் தொடர்பாடல் ஆகிய துறைகளில் சுமார் மூன்று தசாப்த கால அனுபவத்தை கொண்டுள்ளார். இதற்கு முன்னர் Adfactors Public Relations Lanka நிறுவனத்தில் பணியாற்றிய அவர், அங்கு ஊடக உறவுகள், மூலோபாயத் தொடர்பாடல் மற்றும் நெருக்கடி நிலைத் தொடர்பாடல் ஆகிய பிரிவுகளின் குழுத் தலைவராக பணியாற்றினார்.அக்காலப்பகுதியில், இலங்கையின் முன்னணி கைத்தொழில் அமைப்புகள் மற்றும் பெருநிறுவனங்கள் பலவற்றுக்கான கொள்கைசார் முன்னெடுப்புகள், கொள்கை விவகாரங்கள் மற்றும் நெருக்கடி நிலைத் தொடர்பாடல் பணிகளுக்குத் தலைமை தாங்கியுள்ளார்.
அவரது தொழில் வாழ்க்கை ஊடக நிறுவனமொன்றின் செய்திப் பிரிவிலேயே ஆரம்பமானது. ராவய வார இதழில் பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய அவர், அங்கு வர்த்தக ஆசிரியர் பதவிக்கு உயர்ந்தார். இலங்கைப் பத்திரிகை ஆசிரியர் சங்கத்தினால் வழங்கப்படும் சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருதுகளில், 2005, 2006 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் சிங்கள மொழிப் பிரிவில் ஆண்டின் சிறந்த வர்த்தக ஊடகவியலாளர் விருதை மூன்று தடவைகள் பெற்றுள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் எழுத்தாக்கம் மற்றும் தொடர்பாடல் துறையில் முதுகலைப் பட்டப்பின் டிப்ளோமாவைப் பெற்றுள்ள அவர், தற்போது கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரக் கொள்கைக் கற்கைகள் தொடர்பான முதுகலைப் பட்டப்படிப்பைத் தொடர்ந்து வருகின்றார்.
மார்க் அன்ட் கொம் நிறுவனத்தில், சமரசிங்க ஊடக உறவுகள் குழுவுடன் இணைந்து பணியாற்றவுள்ளார். அத்துடன், கொள்கை, பொருளாதாரம் மற்றும் கைத்தொழில் துறை சார்ந்த விவகாரங்களில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனை வழங்கும் வகையில், நிறுவனத்தின் கொள்கைசார் முன்னெடுப்புகள் மற்றும் மூலோபாயத் தொடர்பாடல் பிரிவுடனும் நெருக்கமாக இணைந்து செயற்படவுள்ளார்.
தொழில்நுட்பம், விமானப் போக்குவரத்து, நிதிச் சேவைகள், விருந்தோம்பல், விரைவாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் (FMCG), கைத்தொழில், விவசாயம், அபிவிருத்தி, சுகாதாரம் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மார்க் அன்ட் கொம் நிறுவனம் தனது சேவைகளை வழங்கி வருகின்றது. GlobalCom PR Network அமைப்பின் உறுப்பினராகவும், PR[CA APAC அமைப்பின் நிறுவன உறுப்பினராகவும் விளங்கும் இந்நிறுவனம், 2025ஆம் ஆண்டு நடைபெற்ற ஆண்டுக்கான பிரசார ஆசிய பசுபிக் முகவர் நிலைய [Campaign Asia-Pacific Agency of the Year Awards] விருதுகள் விழாவில், தெற்காசியாவின் ஏனைய நாடுகளைச் சேர்ந்த மக்கள் தொடர்பு நிறுவனங்களுக்கான ஆண்டின் சிறந்த நிறுவனப் பிரிவில் வெள்ளி விருதைப் பெற்றது. அத்துடன், 2026ஆம் ஆண்டு நடைபெற்ற 15ஆவது ACEF உலகளாவிய வாடிக்கையிலர் ஈடுபாட்டு விருதுகள் [Global Customer Engagement Awards]விழாவில், மக்கள் தொடர்பு நிறுவனத்துக்கான ஆண்டின் சிறந்த நிறுவன விருதுக்கான கிராண்ட் பிரிக்ஸ் (Grand Prix) விருது உட்பட இரண்டு தங்க விருதுகளையும் மார்க் அன்ட் கொம் நிறுவனம் வென்றுள்ளது.
“திலின தனது தொழில் வாழ்க்கையில், செய்தியாளராகவும், ஊடகவியலாளர்கள் நம்பியிருக்கும் தொடர்புகளை உருவாக்கும் பொறுப்பிலும் என ஊடகத் துறையின் இரு பக்கங்களிலும் பணியாற்றியுள்ளார். இவ்வாறான இரு தரப்பு அனுபவங்களையும் ஒருங்கே கொண்டிருப்பது அரிதானது. குறிப்பாக, கொள்கைசார் விவகாரங்கள், மக்கள் நலன் சார்ந்த முன்னெடுப்புகள் மற்றும் நெருக்கடி நிலைத் தொடர்பாடல் போன்ற துறைகளில் எமது வாடிக்கையாளர்களுக்கு இத்தகைய அனுபவம் மிகவும் அவசியமானது” என மார்க் அன்ட் கொம் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் தான்சில் தாஜுதீன் தெரிவித்தார்.
“சிக்கலான கொள்கை மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான செய்திகளைப் பொதுமக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் எடுத்துரைப்பதையே எனது தொழில் வாழ்க்கையின் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளேன். ஆழமானதும், முக்கியத்துவம் வாய்ந்ததுமான பணிகளை முன்னெடுப்பதுடன், சிறிய அளவிலான மக்கள் தொடர்பு நிறுவனமொன்றுக்கே உரிய வேகம் மற்றும் நெகிழ்வுத்தன்மையையும் மார்க் அன்ட் கொம் நிறுவனம் தக்கவைத்துள்ளது. இத்தகைய பணிச்சூழலில் இணைந்து பணியாற்றுவதையே நான் விரும்புகிறேன்” என ருவான் திலின சமரசிங்க தெரிவித்தார்.

































