Oct 27, 2026 - 03:45 PM

இலங்கையின் சிறந்த வங்கியாகச் செயற்பட்டு வரும் கொமர்ஷல் வங்கியின் இரண்டரை தசாப்தங்களை (கிட்டத்தட்ட 25 ஆண்டுகள்) நெருங்கும் தொடர்ச்சியான சிறப்பான பயணம், அண்மையில் சர்வதேச அரங்கில் கௌரவிக்கப்பட்டது. இதன்போது, 'Global Finance' அமைப்பினால் வங்கிக்கு வழங்கப்பட்ட இலங்கையின் சிறந்த வங்கிக்கான 24ஆவது விருதை, கொமர்ஷல் வங்கியின் நிர்வாகப் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. சனத் மனதுங்க பெற்றுக்கொண்டார்.
2026ஆம் ஆண்டுக்கான ''Global Finance'' வருடாந்த விருது வழங்கும் விழா, சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கியின் வருடாந்தக் கூட்டங்களுக்கு இணையாக Bangkok இலிலுள்ள Dusit Thani ஹோட்டலில் நடைபெற்றது. அதே நிகழ்வில், இலங்கையின் சிறந்த இஸ்லாமிய வங்கிக்கான 'Global Finance' விருதையும் கொமர்ஷல் வங்கி பெற்றுக்கொண்டது.
'Global Finance' அமைப்பின் 'உலகின் சிறந்த வங்கிகள் 2026' விருதுகள் மூலம், ஆபிரிக்கா, ஆசிய-பசுபிக், கரீபியன், மத்திய அமெரிக்கா, மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பா, இலத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு, வட அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பா ஆகிய பிராந்தியங்களைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட நாடுகள், பிரதேசங்கள் மற்றும் மாவட்டங்களில் மிகச் சிறந்த திறனை வெளிப்படுத்திய வங்கிகள் அங்கீகரிக்கப்பட்டன.
தாய்லாந்தில் நடைபெற்ற இந்த வருடாந்த விருது வழங்கும் நிகழ்வில், 'Global Finance' அமைப்பின் செயல்பாடுகளுக்கான நிர்வாகப் பணிப்பாளர் திரு. கிறிஸ் ஜியாராபுட்டோ மற்றும் 'Intellect' நிறுவனத்தின் ஆசிய-பசுபிக் பிராந்தியத் தலைவர் திரு. நவீன் துலானி ஆகியோருக்கு மத்தியில் கொமர்ஷல் வங்கியின் நிர்வாகப் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. சனத் மனதுங்க காணப்படுவதை படத்தில் காணலாம்.
































