Oct 27, 2026 - 06:12 PM

நீண்டகாலமாக நிலவி வரும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்தங்கள் காரணமாக பழுதடைந்துள்ள நோர்வூட் - பொகவந்தலாவ - கெம்பியன் (B329) வீதியை புனரமைத்து மேம்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
குறித்த வீதியின் 10+500 கிலோமீற்றர் முதல் 16+890 கிலோமீற்றர் வரையிலான பகுதியை புனரமைப்பதற்காக தேசிய போட்டிப் பெறுகை முறைமையைப் பின்பற்றி விலைமனுக்கள் கோரப்பட்டிருந்தன.
இதற்கமைய சமர்ப்பிக்கப்பட்ட 3 விலைமனுக்கள் தொடர்பில் உயர்மட்டப் பெறுகைக் குழு வழங்கியுள்ள பரிந்துரைகளுக்கு அமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்படி, கணிசமான பதிலளிப்புகளுடன் கூடிய குறைந்தபட்ச விலையை வழங்கிய விலைமனுதாரருக்கு, பெறுமதி சேர் வரி நீங்கலாக 756.99 மில்லியன் ரூபாய்க்கு குறித்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கே அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
































