Oct 27, 2026 - 07:03 PM

Evolution Auto (பிரைவேட்) லிமிடெட், இலங்கையில் ஆடம்பர நுண்ணறிவு போக்குவரத்தின் புதிய பரிமாணத்தை அறிமுகப்படுத்தும் வகையில், ITC ரத்னதீப, சங்கம் போல்ரூமில் நடைபெற்ற பிரத்யேக அறிமுக நிகழ்வில் முற்றிலும் புதிய AVATR 07 வாகனத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது.
“கவனிப்பவர்களுக்காக உருவாக்கப்பட்டது” என்ற தத்துவத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட AVATR 07, தனித்துவமான வடிவமைப்பு, நுட்பமான வசதி, மேம்பட்ட டிஜிட்டல் நுண்ணறிவு மற்றும் புதுமையான மின்சார வாகன தொழில்நுட்பம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. இதன் அறிமுகமானது Evolution Auto நிறுவனத்தின் பிரீமியம் வாகனத் தொகுப்பை மேலும் வலுப்படுத்துவதுடன், உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட புதிய ஆற்றல் வாகனங்களை இலங்கை வாகன ஓட்டுநர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கான நிறுவனத்தின் உறுதியாட்டத்தையும் பிரதிபலிக்கிறது.
AVATR ஆனது உலகளவில் நிலைபெற்றுள்ள மூன்று முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் ஒருங்கிணைந்த வலிமையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது: Changan Automobile, Huawei மற்றும் CATL. Changan, 160 ஆண்டுகளுக்கும் மேலான வாகன பொறியியல் மற்றும் உற்பத்தி பாரம்பரியத்தைக் கொண்டுள்ளதுடன், Huawei மேம்பட்ட நுண்ணறிவு அறைத் தொழில்நுட்பம், நுண்ணறிவு ஓட்டுநர் அமைப்புகள் மற்றும் இணைக்கப்பட்ட வாகனத் திறன்களை வழங்குகிறது. உலகின் மிகப்பெரிய மின்கல உற்பத்தியாளரான CATL, மேம்பட்ட மின்கல மற்றும் ஆற்றல் தொழில்நுட்பத்தின் மூலம் இந்த வர்த்தகநாமத்திற்கு ஆதரவளிக்கிறது.
பிரதான வடிவமைப்பு அதிகாரி Nader Faghihzadeh அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் வடிவமைக்கப்பட்ட AVATR 07, நேர்த்தியான தங்க விகிதாசார அமைப்பு, செதுக்கப்பட்டது போன்ற உடல்வடிவமைப்பு மற்றும் சாலையில் தன்னம்பிக்கையான தோற்றம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் காற்றியக்கவியல் வெளிப்புற வடிவமைப்பு 0.259 என்ற மிகக் குறைந்த இழுவைக் குணகத்தைப் பெற்றுள்ளதால், திறனை மேம்படுத்துவதுடன், நேர்த்தியான மற்றும் எதிர்காலத்தை நோக்கிய தோற்றத்தையும் உருவாக்குகிறது.
AVATR 07 பின்புறத்தில் பொருத்தப்பட்டுள்ள மின்சார மோட்டாரால் இயக்கப்படுகிறது. இது 365 Nm முறுக்குவிசையை உருவாக்குவதுடன், 82.16 kWh CATL லித்தியம் இரும்பு பாஸ்பேட் மின்கலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. NEDC சோதனை நிலைகளின் கீழ், இது அதிகபட்சமாக 575 கிலோமீட்டர் வரையிலான பயண தூரத்தை வழங்குகிறது. இதன் மூலம் அன்றாட நகர்ப்புற பயணங்களுக்கும் நீண்ட தூர பயணங்களுக்கும் தேவையான நெகிழ்வுத்தன்மை கிடைக்கிறது.
வாகனத் தொழில்முறை மென்பொருளால் வரையறுக்கப்படும் வாகனங்கள் நோக்கி (Software-Defined Vehicles) நகர்ந்து வரும் நிலையில், கணினிச்செயலாக்க திறன் மேலும் முக்கியத்துவம் பெற்று வருகிறது. TOPS (Trillion Operations Per Second – ஒரு வினாடிக்கு டிரில்லியன் கணக்கான செயல்பாடுகள்) என்பது ஒரு வாகனத்தின் கோட்பாட்டு ரீதியான AI செயலாக்க திறனைக் குறிக்கிறது. AVATR 07 ஆனது 100 TOPS செயலாக்க திறனை வழங்குவதன் மூலம், இலங்கையில் கிடைக்கக்கூடிய அதிநவீன நுண்ணறிவு கொண்ட SUV வாகனங்களில் ஒன்றாக தனது நிலையை மேலும் வலுப்படுத்துகிறது. இந்த அமைப்பு, மொத்தம் 27 சென்சார்கள் கொண்ட விரிவான சென்சார் தொகுப்புடன் இணைந்து செயல்பட்டு, வாகனத்தைச் சுற்றியுள்ள சூழலை நிகழ்நேரத்தில் தொடர்ச்சியாக பகுப்பாய்வு செய்கிறது.
உள்ளே, AVATR 07 ஆனது வசதி, தொழில்நுட்பம் மற்றும் தனிப்பயனாக்கம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட பயணியறையை வழங்குகிறது. இதன் உட்புறத்தில் உயர்தர Nappa தோல் இருக்கை உறைகள், மின்சார சூரிய மறைப்புடன் கூடிய பரந்த கண்ணாடிக் கூரை மற்றும் தொழில்துறையில் முன்னணி ஒளியியல் சுற்றுப்புற விளக்கழகமைப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன. இவை ஓட்டுநர்களுக்கும் பயணிகளுக்கும் நேர்த்தியான மற்றும் வசதியான சூழலை உருவாக்குகின்றன.
எட்டு புள்ளி SPA மசாஜ் செயல்பாட்டுடன் கூடிய இரட்டை Zero Gravity முன் இருக்கைகள், குறிப்பாக நீண்ட தூர பயணங்களின்போது மேம்பட்ட வசதியை வழங்குகின்றன. வாகனத்தின் டிஜிட்டல் அனுபவமானது 35.4 அங்குல 4K பனோரமிக் டிஸ்ப்ளே மற்றும் 15.6 அங்குல மத்திய தொடுதிரை மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் தகவல்கள், பொழுதுபோக்கு மற்றும் வாகனச் செயல்பாடுகளை எளிதாக அணுக முடிகிறது.
Wireless Apple CarPlay மற்றும் Android Auto ஆகியவை தடையற்ற ஸ்மார்ட்போன் இணைப்பை வழங்குகின்றன. அதேவேளையில், விருப்பத்திற்கேற்ப வழங்கப்படும் நுண்ணறிவு டிஜிட்டல் பின்புறக் காட்சிப் கண்ணாடிகள், பார்வைத் திறனை மேலும் மேம்படுத்துவதுடன், வாகனத்தின் மேம்பட்ட ஓட்டுநர் அனுபவத்தையும் உயர்த்துகின்றன. 16 ஸ்பீக்கர்களைக் கொண்ட Avatr Premium 7.1 ஒலி அமைப்பு, அதிவிரிவான மற்றும் ஆழமான ஒலி அனுபவத்தை வழங்குவதன் மூலம் பயணியறையின் அனுபவத்தை முழுமையாக்குகிறது.
அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்த Evolution Auto குழுமத்தின் முதன்மை நிறைவேற்று அதிகாரி திரு. விரான் டி சோய்சா அவர்கள் கூறியதாவது: "AVATR 07 அறிமுகப்படுத்தப்படுவது Evolution Auto நிறுவனத்திற்கும் இலங்கையின் பிரீமியம் மின்சார வாகனச் சந்தைக்கும் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைகிறது. இது சிறப்புமிக்க வாகன பொறியியல், நுண்ணறிவு தொழில்நுட்பம், மேம்பட்ட மின்கலத் தொழில்நுட்பப் புதுமை மற்றும் உண்மையிலேயே நேர்த்தியான சொகுசு அனுபவம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. AVATR ஊடாக, நுண்ணறிவு சார்ந்த போக்குவரத்தில் புதிய தரநிலையை இலங்கையின் நுண்ணறிவு மற்றும் தரத்தை மதிக்கும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். இதனுடன் Evolution Auto நிறுவனத்தின் நம்பகமான விற்பனை மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவை அனுபவத்தையும் இணைத்து வழங்குகிறோம்."
AVATR 07 வாடிக்கையாளர்களுக்கு Evolution Auto நிறுவனத்தின் பிரத்யேக பல்வர்த்தகநாமக் காட்சிஅறைகள், சிறப்பு மின்சார வாகன விற்பனைக்குப் பிந்தைய சேவை வசதிகள் மற்றும் நாடளாவிய ரீதியிலான ஸ்டெர்லிங் ஆஃப்டர் கேர் (Sterling Aftercare) ஆதரவு வலையமைப்பு ஆகியவற்றின் மூலம் சேவைகள் வழங்கப்படும்.
நுணுக்கமான வடிவமைப்பு, நேர்த்தியான உட்புற வசதி, நுண்ணறிவு பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் மேம்பட்ட மின்சார செயல்திறன் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் AVATR 07, இலங்கையில் சொகுசு நுண்ணறிவு மின்சாரப் போக்குவரத்திற்கான புதிய, துணிச்சலான தரநிலையை அறிமுகப்படுத்துகிறது.
AVATR 07 வாகனத்தை நேரடியாக அனுபவிக்க விரும்பும் வாடிக்கையாளர்கள் மேலதிக தகவல்களுக்கு Evolution Auto நிறுவனத்தைத் தொடர்புகொள்ளலாம் அல்லது 0744112132 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்கலாம். சோதனை ஓட்ட முன்பதிவுகளுக்காக www.avatr.lk என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.
































