Oct 27, 2026 - 07:00 PM

செலான் வங்கி, இலங்கையின் முன்னணி ரியல் எஸ்டேட் மற்றும் சொத்து மேம்பாட்டு நிறுவனங்களில் ஒன்றான Fairway Holdingsஇன் துணை நிறுவனமான Fairway Latitude உடன் மூலோபாயக் கூட்டாண்மையில் இணைந்துள்ளது. இதன் மூலம் Fairway Latitudeஇல் சொகுசு தொடர்மாடிகளை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்கள், பிரத்தியேக வீடமைப்புக் கடன் வசதிகளை செலான் வங்கியிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பமிட்டதன் மூலம் இக் கூட்டாண்மை முறைப்படுத்தப்பட்டது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள், நெகிழ்வான நிதித் தெரிவுகள், தனிப்பயனாக்கப்பட்ட ஆதரவு மற்றும் விரைவான செயலாக்க நேரங்கள் ஊடாக வீட்டு உரிமையை எளிதில் பெற்றுக் கொள்ளலாம்.
இவ் இணைவின் கீழ், Fairway Latitudeஇல் நேரடியாக வீடுகளை வாங்கும் தகுதிவாய்ந்த வாடிக்கையாளர்கள், 25 ஆண்டுகள் வரையான திருப்பிச் செலுத்தும் காலம் மற்றும் 7 நாட்களுக்குள் கடன் ஒப்புதல் ஆகிய சிறப்பம்சங்களுடன் பிரத்தியேக நன்மைகளையும் உள்ளடக்கிய செலான் வங்கியின் வீடமைப்புக் கடன் வசதிகளைப் பெற்றுக்கொள்ளலாம். இச் சலுகையை மேலும் மேம்படுத்தும் வகையில் Fairway Latitude, தனது தொடர் மாடிக்குடியிருப்புகளை கொள்வனவு செய்யும் செலான் வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேகத் தள்ளுபடிகளை வழங்கவுள்ளது.
இக் கூட்டாண்மை குறித்து கருத்து தெரிவித்த செலான் வங்கி பிஎல்சியின் தனிநபர் வங்கிப் பிரிவின் துணைப் பொது முகாமையாளர் யூஜின் செனவிரத்ன, "சொந்த வீடு வாங்குவது என்பது மனிதனின் வாழ்க்கையில் மிக முக்கியமான நிதிக் மைல்கற்களில் ஒன்றாகும். Fairway Latitude உடனான இக் கூட்டாண்மை, நெகிழ்வான நிதியுதவி மற்றும் விரைவான செயலாக்கத்தை வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர்களின் அப்பயணத்தை எளிதாக்குகிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் கனவு இல்லத்தை சொந்தமாக்கத் தேவையான நிதி உதவியை வழங்கி, நம்பிக்கையான படி எடுத்து வைக்க உதவுவதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம்." என்றார்.
Fairway Holdings தலைவர் விராத் டி அல்விஸ் குறிப்பிடுகையில், "எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்பையும் சௌகரியத்தையும் வழங்குவதற்காக செலான் வங்கியுடன் கைகோர்ப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஒத்துழைப்பு ஆனது Fairway Latitudeஇன் வீட்டுத் தீர்வுகளையும், செலான் வங்கியின் வீடமைப்பிற்கான நிதி வழங்கல் நிபுணத்துவத்தையும் ஒன்றிணைக்கிறது. இதன் மூலம் வருங்கால வீட்டு உரிமையாளர்கள் கவர்ச்சிகரமான கடன் வசதிகளையும், பிரத்தியேக சலுகைகளையும் பெற முடியும். பல இலங்கையர்களின் சொந்த வீட்டுக் கனவை நிஜமாக்க இக் கூட்டாண்மை பெரிதும் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்." என்றார்.
செலான் வங்கியின் அர்ப்பணிப்புள்ள வீடமைப்புக் கடன் நிபுணர்கள், ஆரம்ப கட்ட விசாரணை முதல் கடன் தொகை வழங்கப்படும் வரை, வாடிக்கையாளர்களுக்கு வழிகாட்டத் தயாராக உள்ளனர். இவர்கள் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று சேவைகளை வழங்குவதுடன் இலவச ஆலோசனைகளையும் வழங்குகின்றனர். மேலும், நாடு முழுவதும் உள்ள செலான் வங்கியின் கிளை வலையமைப்பின் ஊடாகவும் வாடிக்கையாளர்கள் இக்கடன் வசதியைப் பெற்றுக்கொள்ளலாம். வங்கி ஊழியர்கள், கடன் பெறுவதற்கான நடைமுறை முழுவதிலும், தேவையான ஆவணங்கள் தொடர்பான உதவிகளையும் தொடர்ச்சியான வழிகாட்டலையும் வழங்குகின்றனர்.
இக் கூட்டாண்மை ஊடாக வாடிக்கையாளர்கள், தங்களுக்கு விருப்பமான வீட்டினை வாங்கும் போது அதிகரித்த நிதி எளிமை, சௌகரியம் மற்றும் நம்பகத்தன்மையை வழங்குவதுடன், பல இலங்கையர்களின் வீடு மற்றும் நிலம் வாங்கும் கனவை நனவாக்க உதவுவதையும் செலான் வங்கியும் Fairway Latitudeம் நோக்கமாகக் கொண்டுள்ளன.
வீடமைப்புக் கடன் வசதி பற்றிய மேலதிக விபரங்களுக்கு, 011 200 88 88 என்ற செலான் வங்கியின் விசேட தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.
































