Nov 5, 2026 - 06:50 PM
By கண்டி நிருபர் ராஜ்
By கண்டி நிருபர் ராஜ்

மத்திய மாகாணத்தில் முதன்முறையாக, கம்பளைப் பொலிஸ் அத்தியட்சகர், அத்தியட்சகர் காரியாலயத்தின் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மற்றும் மேலும் ஏழு பொலிஸ் நிலையங்களின் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கலந்துகொண்டு, கம்பளை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் தீபாவளி தினத்தை முன்னிட்டுச் சிறப்புப் பூஜை வழிபாடுகள் இன்று (05) வெகுவிமரிசையாக நடத்தப்பட்டன.
தீபாவளித் தினத்தை முன்னிட்டு, கம்பளை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் பொலிஸ் உயர் மட்ட அதிகாரிகள் தலைமையில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
கம்பளை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் புதிய நிர்வாகத்தின் தலைமையில், தலைவர் பாலச்சந்திரன் (ரவி), செயலாளர் சரவணன், பொருளாளர் காந்தன் மற்றும் நிர்வாக உறுப்பினர்களின் ஏற்பாட்டில் இந்தச் சிறப்புப் பூஜைகள் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தன.
இந்தச் சிறப்புப் பூஜையில் அதிகமான பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
































