Nov 9, 2026 - 02:53 PM

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு சட்டமூலத்தில் சேர்க்கப்பட்டிருந்த 'பச்சை குத்துதல்' (Tattoos) மற்றும் 'அடையாளங்கள்' தொடர்பான ஏற்பாடுகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகச் சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக, தீவிர குற்றச் சம்பவங்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளின் எந்தவொரு தகவலையும் அல்லது விடயத்தையும் ஊடகங்களில் வெளியிடுவதற்கு முன்னர், உரிய நீதிமன்றத்தின் முன்அனுமதியைப் பெற வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்த சட்டப்பிரிவையும் நீக்கவுள்ளதாக சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
குறித்த சட்டமூலத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் இன்று (9) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன இந்த அறிவிப்பை நீதிமன்றத்தில் விடுத்தார்.
































