Nov 9, 2026 - 06:59 PM

ஹைலெவல் வீதியின் பாதுக்க, துன்னான எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு அருகில் வீதிக்கு மேல் விசாலாமான மரமொன்று வீதியில் முறிந்து விழுந்ததில், அவ்வழியாகப் பயணித்த காரொன்று சேதமடைந்துள்ளது.
இந்த விபத்தையடுத்து, ஹைலெவல் வீதியூடான வாகனப் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகப் பாதுக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், இச்சம்பவத்தில் எவருக்கும் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
வீதியில் விழுந்துள்ள மரத்தை அறுத்து அகற்றி, வீதியை விரைவாக மீண்டும் போக்குவரத்திற்காகச் சீரமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
































