Nov 12, 2026 - 03:04 PM

மாதாந்தம் 180 அலகுகளுக்கு (Units) மேல் பயன்படுத்தும் மின்சார பாவனையாளர்களுக்கு மொத்தமாக 300,000 திறன்மிகு மின்மானிகள் (Smart meters) இலவசமாக வழங்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் 2027 வரவு செலவு திட்ட உரையை நிகழ்த்தி வரும் நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் 12 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியுடன், இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன் லங்கா மின்சார தனியார் நிறுவனத்தின் (LECO) கீழ் 120 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் அனைத்து மின் நுகர்வோருக்கும் திறன்மிக்க மின்மானிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் முழு விபரங்களை அறிய …
































