Nov 13, 2026 - 10:11 PM

நாட்டின் வனஜீவராசி வளங்களைப் பாதுகாப்பதற்கும், யானை - மனித மோதல்களுக்குத் தீர்வு காண்பதற்கும், வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் கள நடவடிக்கைகளைப் பலப்படுத்துவதற்கும் 84 நவீன கெப் (Single Cab) வண்டிகள் அந்தத் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன.
சுற்றாடல் அமைச்சர் தம்மிக பட்டபெந்தி மற்றும் சுற்றாடல் பிரதி அமைச்சர் அண்டன் ஜயகொடி ஆகியோரின் தலைமையில் இந்த வாகனங்கள் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.
வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்துக்கு ஒரே தடவையில் வழங்கப்பட்ட மிகப்பெரிய வாகனத் தொகுதி இதுவாகும்.
இதனையடுத்து, அந்தத் திணைக்களம் வசமுள்ள மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 294 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி திணைக்களத்திடம் 84 சிங்கள் கெப் வாகனங்கள், 16 டபள் கெப் வாகனங்கள், 3 க்ரூ கெப் (Crew Cab) வாகனங்கள், 181 மோட்டார் சைக்கிள்கள், 9 டிராக்டர்கள் மற்றும் ஒரு ஹேண்ட் டிராக்டர் ஆகியவை காணப்படுகின்றன.
































