Nov 13, 2026 - 06:05 PM

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடனும் போதைப்பொருள் வர்த்தகத்துடனும் தொடர்புடையதாகக் கூறப்படும் 'தெஹிபாலே மல்லி' எனப்படும் பட்டபெந்தி மத்துமகே ஷெஹான் சத்ஸர என்ற வெளிநாடொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், இந்த கைது நடவடிக்கை குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு இதுவரை இலங்கையின் பாதுகாப்புப் பிரிவினருக்கு வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து தப்பியோடி துபாய் நாட்டில் பதுங்கியிருந்த இவர், அங்கிருந்து தெற்கு மாகாணத்தில் தனது போதைப்பொருள் வர்த்தகங்களை நெறிப்படுத்தி வந்துள்ளதுடன், சந்தேகநபர் மீது பல கொலைக் குற்றச்சாட்டுகளும் நிலுவையில் உள்ளன.
இந்தநிலையில், துபாயில் இருந்து பின்னர் ஐரோப்பிய நாடு ஒன்றிற்குத் தப்பியோடிய சத்ஸர, அங்குள்ள பாதுகாப்புப் பிரிவினரால் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
































