Nov 13, 2026 - 05:27 PM

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
36 வயதான முகமது ஷமி, கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் திகதி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். சரியாக 13 ஆண்டுகள் நிறைவடைந்த அதே நாளில் தான் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுப்பெறுவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது சமூக வலைதளப்பக்கத்தில், வெள்ளை நிற சீருடையை கழற்றி வைக்கிறேன். ஆனால், அதனுடன் தொடர்புடைய நினைவுகள் என்றும் என்னுடன் இருக்கும் என்றும் இந்தியாவின் டெஸ்ட் சீருடையை முதன்முதலில் அணிந்த போது, நாட்டுக்காக ஏதேனும் ஒரு பங்களிப்பை செய்ய வேண்டும் என்ற ஒரே கனவு தான் என் மனதில் இருந்தது என்றும் பதிவிட்டுள்ளார்.
ஒரு நாள் போட்டிகள், ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடவுள்ளதாக முகமது ஷமி அறிவித்துள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் திகதி, கொல்கத்தா ஈடன் கார்டன் திடலில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியின் மூலம்தான் முகமது ஷமி தனது டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கினார். சரியாக 13 ஆண்டுகள் கழித்து, அதே திகதியில் தனது சிவப்பு பந்து கிரிக்கெட் வாழ்க்கைக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
































