Nov 13, 2026 - 04:30 PM

ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் (MI) அணியின் தலைவராக இருந்த ஹர்திக் பாண்டியா பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிக்கு டிரேட் மூலம் அதிகாரப்பூர்வமாக மாறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, அணியின் புதிய தலைவர் தேர்வு குறித்து மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஹர்திக் பாண்டியாவின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது அணி தலைவர் இல்லாத சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது.
இந்த நிலையில், புதிய அணி தலைவரை தேர்வு செய்வதில் எந்தவித அவசரமும் காட்டப்போவதில்லை என்றும், அனைத்துக் காரணிகளையும் நிதானமாகப் பரிசீலித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் மும்பை நிர்வாகம் தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.
இதுகுறித்து மும்பை இந்தியன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வரவிருக்கும் புதிய சீசனை நோக்கிய பயணத்தில், அணியின் கேப்டன்சிக்கான அனைத்து வாய்ப்புகளையும் நிர்வாகம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. சரியான நேரத்தில் புதிய அணி தலைவர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மும்பை அணியின் அடுத்த அணி தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இந்த பந்தயத்தில் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் இளம் வீரர் திலக் வர்மா ஆகியோரின் பெயர்கள் முன்னணியில் உள்ளன.
நவம்பர் 17 ஆம் திகதி வீரர்களைத் தக்கவைக்கும் காலக்கெடு முடியவுள்ள நிலையிலும், டிசம்பர் 16 அன்று கோவாவில் மினி ஏலம் நடைபெறவுள்ள நிலையிலும், அதற்குள் மும்பை இந்தியன்ஸ் அணி தனது புதிய அணி தலைவரை முறைப்படி அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
































