Nov 13, 2026 - 04:51 PM

‘அமரன்’ பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஓம்’. இப்படத்தில், மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் சாய் பல்லவி, ஸ்ரீலீலா, பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சாய் அபய்ங்கர் இசையமைத்துள்ளார். இவரின் இசையில் வெளியான ‘அலாக்கா லூவா’ மற்றும் ‘வீழா வீரா’ நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படம் வரும் 20 ஆம் திகதி வெளியாகவுள்ளது. அண்மையில் இப்படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோக்கள் வெளியாகி வருகிறது. அதன்படி சர்வதேச கடத்தல்காரராக மம்மூட்டி, பொலிஸ் அதிகாரியாக சாய் பல்லவி தனுஷின் மனைவியாக ஸ்ரீலீலா ஆகியோர் வருகின்றனர். இதைத் தொடர்ந்து படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக சென்னையில் நடந்தது.
இந்நிலையில் படத்தின் டிரெய்லர் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இன்று (13) வெளியாகவுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர். எந்த நேரத்தில் வெளியாகும் எனப் படக்குழு அறிவிக்கவில்லை.
































