Nov 16, 2026 - 04:13 PM

தெவிநுவர உபுல்வன் மகா தேவாலயத்தின் புதிய பதில் பஸ்நாயக்க நிலமே பதவிக்காக சம்பத் கிரிகே நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பஸ்நாயக்க நிலமே திலின மதுசங்கவின் பதவிக்காலம் நேற்றுடன் (15) நிறைவடைந்ததை அடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
மூன்று மாத காலப்பகுதிக்கு பதில் பஸ்நாயக்க நிலமே பதவிக்கு சம்பத் கிரிகே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, பௌத்த மத விவகார ஆணையாளரால் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு புதிய பஸ்நாயக்க நிலமே தெரிவு செய்யப்படவுள்ளார்.
மாத்தறை, கம்புருபிட்டிய பகுதியில் பிறந்துள்ள சம்பத் கிரிகே, காலி புனித அலோசியஸ் கல்லூரியிலும், கல்கிசை புனித தோமஸ் கல்லூரியிலும் தனது ஆரம்பக் கல்வியைக் பயின்றுள்ளார்.
இவர், சுமார் இரண்டு தசாப்த கால விமான சேவைத் துறைசார் முகாமைத்துவ அனுபவம் கொண்ட ஒரு நிபுணராவார்.
மேலும், இவர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் விமான நிலைய சேவைகள் நிறுவனத்தில் பணியாற்றியவராவார்.
சம்பத் கிரிகே தேசிய மட்டத்திலான முன்னாள் கூடைப்பந்து வீரரும் ஆவார்.

































