Nov 17, 2026 - 06:34 PM

JXG (ஜனசக்தி குழுமம்)இன் துணை நிறுவனமான ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி, 2026 செப்டெம்பர் 30ஆம் திகதியுடன் நிறைவடைந்த ஆறு மாத காலப்பகுதியில், தணிக்கை செய்யப்படாத வரிக்குப் பிந்திய இலாபமாக ரூ. 198.6 மில்லியனைப் பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவான ரூ. 141.3 மில்லியனுடன் ஒப்பிடுகையில் 40.5% அதிகரிப்பாகும்.
நிறுவனம் தனது கடன் வழங்கல் மற்றும் வைப்புக்கள் ஆகிய இரு சேவைப் பிரிவுகளிலும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், நிகர தொழிற்பாட்டு வருமானத்திலும் அதிகரிப்பை எட்டியுள்ளது. பொறுப்புணர்வுடனான வளர்ச்சி, நிலைபேறான இலாபத்தன்மை மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு தொடர்ச்சியாக முன்னுரிமை அளித்தல் ஆகியவற்றின் ஊடாக இந்த முன்னேற்றத்தை மேலும் வலுப்படுத்துவதில் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.
வரிக்கு முந்திய இலாபம் 1.9% ஆல் அதிகரித்து ரூ. 245.6 மில்லியனாகப் பதிவாகியுள்ளதுடன் நிகர தொழிற்பாட்டு வருமானம் 11.0% ஆல் அதிகரித்து ரூ. 1,591.7 மில்லியனாக உயர்ந்துள்ளது. 2026 செப்டெம்பர் 30ஆம் திகதி நிலவரப்படி, கடன்கள் மற்றும் பெறத்தக்க தொகைகளின் பெறுமதி ரூ. 32.94 பில்லியனாகப் பதிவாகியுள்ளது. இது 2025 செப்டெம்பர் 30ஆம் திகதியுடன் ஒப்பிடுகையில் 23.5% அதிகரிப்பாகும். இதே காலப்பகுதியில் வைப்புத் தொகைகளும் 14.7% ஆல் அதிகரித்து ரூ. 19.36 பில்லியனாக உயர்ந்துள்ளன.
2026/27 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி ரூ. 108.2 மில்லியனை வரிக்குப் பிந்திய இலாபமாகப் பதிவு செய்துள்ளது. முந்தைய காலாண்டில் பதிவான ரூ. 90.4 மில்லியனுடன் ஒப்பிடுகையில் இது 19.7% அதிகரிப்பாகும். இதேவேளை, நிகர தொழிற்பாட்டு வருமானம் 10.0% ஆல் குறைந்து ரூ. 754.0 மில்லியனாகப் பதிவாகியுள்ளதுடன், வரிக்கு முந்திய இலாபமும் 22.3% ஆல் குறைந்து ரூ. 107.3 மில்லியனாகப் பதிவாகியுள்ளது.
நிறுவனத்தின் பெறுபேறுகள் குறித்து கருத்துத் தெரிவித்த ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சியின் தலைவர் ராஜேந்திர தியாகராஜா அவர்கள், “பொறுப்புணர்வுடனான வளர்ச்சியைப் பேணுவதில் நிறுவனம் கொண்டுள்ள கவனத்தை இப்பெறுபேறுகள் எடுத்துக்காட்டுகின்றன. வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன், எமது அனைத்து பங்குதாரர்களுக்கும் நீண்டகால மதிப்பை உருவாக்கக்கூடிய வலுவானதும் நிலைபேறானதுமான நிதி நிறுவனமொன்றைக் கட்டியெழுப்புவதே எமது முன்னுரிமையாகும்.” என்றார்.
ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி சிதம்பரம் ஸ்ரீ கணேந்திரன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், “ஜனசக்தி பைனான்ஸ்ஸின் அரையாண்டுப் பெறுபேறுகள், எமது கடன் வழங்கல் மற்றும் வைப்புத் திரட்டல் செயற்பாடுகள் தொடர்ந்து விரிவடைந்து வருவதைப் பிரதிபலிக்கின்றன. வணிகச் செயற்பாடுகளை ஒழுங்குமுறையுடன் முன்னெடுத்தல், செயற்பாட்டுத் திறனை மேம்படுத்துதல் மற்றும் விவேகமான இடர் முகாமைத்துவம் ஆகியவற்றின் ஊடாக இந்த வளர்ச்சியை நிலைபேறான வருமானமாக மாற்றுவதே எமது முக்கிய கவனமாகும். அதே வேளை, எமது வாடிக்கையாளர்களின் மாறிவரும் தேவைகளைத் தொடர்ந்து பூர்த்தி செய்வதிலும் நாம் கவனம் செலுத்தி வருகிறோம்.” என்றார்.
ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி பற்றி
JXG (ஜனசக்தி குழுமம்) இன் துணை நிறுவனமான ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி, நிலையான வைப்புகள், சேமிப்புக் கணக்குகள், லீசிங், தங்கக் கடன்கள், மாற்று நிதித்தீர்வுகள் மற்றும் கூட்டாண்மை நிதிவசதியளிப்புகள் உள்ளிட்ட பல்வேறு நிதிச்சேவைகளை வழங்குகிறது. நிதிச்சேவைகள் துறையில் 45 ஆண்டுகால அனுபவம் கொண்ட நிறுவனம், எளிதில் அணுகக்கூடிய மற்றும் துரிதமான சேவைகள் ஊடாக வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்துகிறது. ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி, இலங்கை மத்திய வங்கியின் உரிமம் பெற்றதுடன் லங்கா ரேட்டிங் ஏஜென்சியால் (LRA) நேர்மறையான கண்ணோட்டத்துடன் BB+ தரப்படுத்தலை பெற்றுள்ளது.
ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி – https://www.janashakthifinance.lk/

































