Nov 11, 2026 - 09:29 AM

இன்று (11) சந்திர பகவான் விருச்சிக ராசியின் அனுஷம் பின் கேட்டை நட்சத்திரத்தில் பயணிக்கிறார். இன்று சித்த யோகம். மேஷ ராசியில் உள்ள அஸ்வினி பின் பரணி நட்சத்திரத்திற்கு நாள் முழுவதும் சந்திராஷ்டம நாள். இன்று கந்த சஷ்டி விரதம் 2ம் நாள். இன்று சுபமுகூர்த்த தினம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று எதிலும் நிதானம் மற்றும் கவனம் தேவைப்படக்கூடிய நாள். இன்று நாள் முழுவதும் சந்திராஷ்டமம் உங்கள் ராசிக்கு இருக்கிறது. குடும்ப வாழ்க்கையிலும், வேலை தொடர்பான விஷயங்களில் பொறுமை தேவைப்படும். இன்று ஆடம்பரப் பொருட்கள் வாங்குவது தவிர்க்கவும். மேலும் தேவையற்ற செலவுகள் கட்டுப்படுத்த வேண்டிய நாள். ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விதமாக உணவுகளை எடுத்துக் கொள்வதோடு, யோகா, தியானம் போன்ற நல்ல விஷயங்களில் ஆர்வம் காட்டுவது நன்மை தரும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வீட்டின் குடும்ப உறுப்பினர்களை ஒருங்கிணைக்க வேண்டிய நாள். இன்று நீங்கள் சுவாரசியமான பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு. இன்று சிலரிடமிருந்து ஆரோக்கியமாக இருப்பதற்கான ஊக்கத்தை பெறுவீர்கள். இன்று கணவன் மனைவி இடையே இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகள், வருத்தங்கள் நீங்கும். எதிர்பாராத சில மகிழ்ச்சியான செய்திக்கு கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும் என்பதாக நிலைகளை எதிர்பார்த்த விதத்தில் முடிக்க முடியும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய காதல் உறவில் மகிழ்ச்சியும், புரிதலும் இருக்கும். தொழில் தொடர்பான பயணங்கள் பலன் தரக்கூடியதாக அமையும். மருத்துவம், பொறியியல் துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் நிறைந்திருக்கும். இன்று நீங்கள் செய்யக்கூடிய செயல்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். நீங்கள் விரும்பிய அங்கீகாரம் கிடைக்கும். வழக்குகள் தொடர்பான விஷயங்களில் சில மாற்றங்களை செய்ய வேண்டியது இருக்கும். என்று நீங்கள் மாறுபட்ட சூழ்நிலையை கையாள வேண்டியது இருக்கும்.எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று பருவநிலை மாற்றம் காரணமாக உடல் நலம் சற்று பாதிக்கப்படும். அதனால் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள் எடுத்துக் கொள்வதிலும் மற்றும் உடற்பயிற்சிகள் செய்வதில் ஆர்வம் காட்டவும். சில முக்கியமான விஷயங்களை புரிந்து கொள்ள சிரமப்படுவீர்கள். குடும்பத்தினருடன் தரமான நேரத்தை செலவிட வாய்ப்பு உண்டு. இன்று மனதளவில் சற்று சோர்வாக உணருவீர்கள். இன்று உங்களை நம்பி வந்தவர்களுக்கு தேவையான உதவிகள் செய்வீர்கள். சமூகத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய செலவுகளை விட வருமானம் அதிகமாக இருக்கும். அதனால் முதலீடுகள் மற்றும் முக்கிய சேமிப்பு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். நலம் விரும்புகளுடன் நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். உங்களுடைய நிதிநிலை வலுவாக இருக்கும். சுப காரியங்கள் நடத்துவது தொடர்பான விவாதங்கள் வீட்டில் நடக்கும். உறவினர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். ஆரோக்கியம் மேம்படக்கூடிய நாள். நெருக்கடியான சூழ்நிலைகள் இருந்தாலும் பிரச்சனைகள் குறைவாக இருக்கும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று புதிய இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு மகிழ்வீர்கள். இன்று உங்களுக்கு பொருத்தமான விஷயங்களில் முதலீடு, சொத்து தொடர்பான முதலீடு செய்ய ஆர்வப்படுவீர்கள். தொழில் முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். கணவன் மனைவி இடையே உள்ள கருத்து வேறுபாடுகளை பணம் விட்டுப் பேசுவதன் மூலம் தீரும். உங்கள் மனதில் புதுவித மாற்றம் ஏற்படும்.கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று நிதி விஷயங்கள் தொடர்பாக சற்று கவலைகள் ஏற்படலாம். கல்வி தொடர்பாக எதிர்பாராத திருப்பங்கள் சங்கடத்தை ஏற்படுத்தும். படிப்பில் கவனம் தேவை. குடும்ப சூழ்நிலையில் நிதானமான மற்றும் இனிய பேச்சால் சூழ்நிலை சாதகமாக கொண்டு வர முடியும். உங்கள் துணையின் முழு ஆதரவு கிடைக்கக்கூடிய நாள். உத்தியோகத்தில் இருப்பவர்களின் மதிப்பு உயரக்கூடிய நாள். பொன், சேர்க்கை ஏற்படும். இன்று உங்களுடைய ஞாபக மறதி பிரச்சனை ஓரளவு குறையும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று வேலை தொடர்பாக வெளியூர், வெளிநாடு பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு உண்டு. வேலை அல்லது இடம் மாற்றம் செய்வதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். அலுவலகத்தில் எதிர்பாராத சில மாற்றங்கள் இருக்கும். திடீர் செலவுகளால் நெருக்கடியை சந்திக்க வாய்ப்பு உண்டு. இன்று உங்கள் மனதில் தோன்றும் பிரகாசமான யோசனைகள் தொழிலை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல உதவும். சிலரிடமிருந்து எதிர்பாராத உதவிகளும் ஆலோசனையின் கிடைக்கும்.உங்கள் செயல்பாடுகளில் மாற்றம் தேவைப்படும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று ஆக்கபூர்வமான சிந்தனையுடன் முயற்சிகளை செய்தால் எதிர்பார்த்து வெற்றி கிடைக்கும். நிதி ஆதாயம் கிடைக்கக்கூடிய நாள். தொழில் சார்ந்த புதிய யோசனைகள், நண்பர்கள் கிடைப்பார்கள். குடும்ப உறவில் நல்ல மாற்றங்கள் இருக்கும். ஆடம்பரமான விஷயங்களை ஆர்வத்தை குறைத்துக் கொள்ளவும். இன்று மனதில் இனம் புரியாத குழப்பம் தோன்றலாம். இன்று காலை முதலே சரியான திட்டமிடலுடன் செயல்படுவது நன்மை தரும். இது உங்களுடைய பணம் தொடர்பான திடீர் விரயங்களை தவிர்க்க உதவும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று அதில் நீங்கள் எதிர்பார்த்த உதவியும் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தினருடன் சேர்ந்து பயணங்கள் மேற்கொள்ள திட்டமிடுவீர்கள். உங்களுடைய தொழில், வியாபாரம் தொடர்பாக மறைமுக போட்டிகளில் எதிர்கொள்ள நேரிடும். பூர்வீக சொத்து தொடர்பான விஷயங்களில் லாபம் கிடைக்கும். இன்று நீங்கள் லாபத்தை மேம்படுத்துவது தொடர்பாக எடுக்கக்கூடிய முயற்சிகள் நல்ல பலனை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். காதல் விஷயத்தில் மகிழ்ச்சியும், அவர்களின் அன்பும் கிடைக்கும். சுப காரியங்கள் தொடர்பான முயற்சிகள் நல்ல பலனை தரும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று சொத்து வாங்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு சாதகமான நாளாக அமையும். வேலை தொடர்பாக கூடுதல் பணி சுமை நிறைந்திருக்கும். இன்றும் உங்கள் உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டிய நாள். உங்களுக்கு பிடித்த விளையாட்டில் ஈடுபடுவது மற்றும் உடற்பயிற்சிகள் செய்வதில் ஆர்வம் காட்டவும். பயணங்கள் மூலம் அனுகூல பலம் ஏற்படும். தொழில் ரீதியான வருமானம் கிடைக்கக்கூடிய நாள். இன்று நீங்கள் புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வம் உண்டாகும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று மனதில் புதுவித யோசனைகள் உண்டாகும். இது உங்களுடைய வேலை, தொழிலை முன்னேற்றக் கூடியதாக அமையும். சில நாட்களாக சந்தித்து வந்த தடை, தாமதங்கள் விலகும். நீங்கள் கடன் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். வியாபாரம் தொடர்பாக நல்ல மாற்றங்கள் ஏற்படக்கூடிய நாள். உங்களுடைய முயற்சிகள் மூலம் தடை நீங்கி வெற்றி பெறுவீர்கள். உடல் நலம் தொடர்பாக கவனம் தேவை. நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். செலவுகளை கட்டுப்படுத்தும் முயற்சிகள் வெற்றி அடையும்.
































