Nov 11, 2026 - 10:08 AM

ஐ.பி.எல் 2027 தொடருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிகளுக்கிடையே நட்சத்திர வீரர்களின் (Trade) வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
இதன்படி, 2024 முதல் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராகச் செயல்பட்ட ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மாறியுள்ளார். அதேவேளை, 2019 இல் அறிமுகமானது முதல் பஞ்சாப் அணியின் முக்கிய பந்துவீச்சாளராகத் திகழ்ந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறியுள்ளார். இதன் மூலம் மும்பை அணியில் ஜஸ்பிரித் பும்ராவுடன் இணைந்து அர்ஷ்தீப் சிங் செயற்படவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வௌியாகியுள்ளது.
ஐ.பி.எல் நிர்வாகத்தின் அறிவித்தலின் படி,
ஹர்திக் பாண்டியா தனது முந்தைய சம்பளமான 16.35 கோடி ரூபாயில் இருந்து உயர்ந்து, 18 கோடி ரூபாய் (இந்திய மதிப்பில்) சம்பளம் பஞ்சாப் கிங்ஸ் அணி பெறவுள்ளார்.
அர்ஷ்தீப் சிங் தனது தற்போதைய சம்பளம் 18 கோடி ரூபாய் (இந்திய மதிப்பில்), அதே சம்பளத்திலேயே மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்துள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ் அணி, ஹர்திக் பாண்டியா விளையாடும் மூன்றாவது ஐ.பி.எல் அணியாகும். 2015 இல் மும்பை அணிக்காக அறிமுகமான அவர், 2022 இல் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியின் தலைவராகச் சென்று முதல் ஆண்டிலேயே கிண்ணத்தை வென்று கொடுத்தார்.
பின்னர் 2024 இல் மீண்டும் மும்பை அணிக்குத் திரும்பி தலைவரானார். அவர் இதுவரை 5 முறை ஐ.பி.எல் கிண்ணத்தை வென்றுள்ளார் (மும்பையுடன் 4 முறை, குஜராத்துடன் 1 முறை).
ஹர்திக்கின் தலைமையில் மும்பை அணி 39 போட்டிகளில் விளையாடி 15 வெற்றிகளையும் 24 தோல்விகளையும் சந்தித்துள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக 8 Seasons 96 போட்டிகளில் விளையாடியுள்ள அர்ஷ்தீப் சிங், 111 விக்கெட்டுகளைக் வீழ்த்தியுள்ளார். பஞ்சாப் அணியின் 19 ஆண்டுகால ஐ.பி.எல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை இவர் தன்வசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
































