Nov 11, 2026 - 08:55 AM

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை லாகூரிலிருந்து ராவல்பிண்டிக்கு மாற்றுவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தீர்மானித்துள்ளது.
லாகூர் நகரில் அதிகரித்து வரும் அடர் புகைக் மூட்டம் (Smog) மற்றும் காற்று மாசுபாட்டைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அச்சபை அறிவித்துள்ளது.
இதற்கமைய, நவம்பர் 17 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை நடைபெறவிருந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இத்தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியும் தற்போது ராவல்பிண்டி மைதானத்திலேயே நடைபெற்று வரும் நிலையில், அதில் தனது முதல் இன்னிங்ஸில் விளையாடிய பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 434 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது தனது இன்னிங்ஸை இடைநிறுத்திக்கொண்டது.
பதிலுக்குத் தனது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 114 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
போதிய வெளிச்சமின்மை காரணமாக தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே ஆட்டத்தை முடித்துக்கொள்ள நேரிட்டது.
































