Nov 11, 2026 - 09:27 AM

அநுராதபுரதத்தில் சத்தியாகிரகம் இடம்பெற்று வந்த இடத்தில் பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று தேரர்கள் இன்று (11) காலை சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தி திட்டத்திற்கு எதிராக பௌத்த தேரர்கள் குழுவொன்று ருவன்வெலிசாயவிற்கு அருகிலுள்ள தானசாலை வளாகத்தில் கடந்த 7ஆம் திகதி சத்தியாகிரகப் போராட்டமொன்றை ஆரம்பித்திருந்தது.
குறித்த இடத்திலிருந்து வெளியேறுமாறு நீதிமன்ற உத்தரவொன்று பிறப்பிக்கப்பட்டிருந்த பின்னணியிலேயே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதனிடையே, இன்று கொழும்பு மாவட்டக் குற்றத்தடுப்புப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலமளிக்குமாறு கஸ்ஸப தேரருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், இவ்வாறான பின்னணியிலேயே கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று தேரர்கள் இவ்வாறு சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
































