Nov 11, 2026 - 10:00 AM

கித்துல்கல பகுதியில் இன்று (11) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.
முச்சக்கர வண்டி ஒன்றும் லொறி ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் காயமடைந்த இருவரையும் வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு பொலிஸாரும் பிரதேசவாசிகளும் நடவடிக்கை எடுத்தனர்.
































