Nov 11, 2026 - 06:35 AM

பாறை மற்றும் மண்மேடு சரிவு ஆபத்து காரணமாக மூடப்பட்டிருந்த கடுகன்னாவ - கனேதென்ன இடையிலான வீதிப்பகுதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடுகன்னாவ வீதியில் நேற்று மாலை (10) பாறைகள் மற்றும் மண்மேடு சரிந்து விழுந்தமையினால், வீதியை இன்று (11) காலை 6.00 மணி வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்நிலை ஏற்பட்டதோடு, இந்த பாறைச் சரிவு காரணமாக வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றிற்கும் சேதம் ஏற்பட்டிருந்தது.

































