Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வரும் மக்கள்!

அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வரும் மக்கள்!

யாழில் 'மெட்ரோ பஸ்' (Metro Bus) சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை!

யாழில் 'மெட்ரோ பஸ்' (Metro Bus) சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை!

நுவரெலியாவில் தொடரும் கனமழை!

நுவரெலியாவில் தொடரும் கனமழை!

மரம் ஒன்றில் சிக்கியிருந்த நிலையில்...

மரம் ஒன்றில் சிக்கியிருந்த நிலையில்...

பெரும் துயரத்தில் மக்கள்!

பெரும் துயரத்தில் மக்கள்!

போக்குவரத்துக்கு பெரும் பாதிப்பு!

போக்குவரத்துக்கு பெரும் பாதிப்பு!

ஹட்டனில் கொட்டித்தீர்த்த கனமழை!

ஹட்டனில் கொட்டித்தீர்த்த கனமழை!

ஜனாதிபதி ராஜதந்திர முறையில் செயற்படுகிறார்!

ஜனாதிபதி ராஜதந்திர முறையில் செயற்படுகிறார்!

செம்மணி இன அழிப்பின் சாட்சியம்!

செம்மணி இன அழிப்பின் சாட்சியம்!

மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்!

மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்!

வான் பாய்கிறது விமலசுரேந்திர நீர்த்தேக்கம்

வான் பாய்கிறது விமலசுரேந்திர நீர்த்தேக்கம்

நாங்கள் நியாயமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளோம்!

நாங்கள் நியாயமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளோம்!

சுகயீன விடுமுறை போராட்டம்!

சுகயீன விடுமுறை போராட்டம்!

தீப ஒளியில் மிளிரும் இலங்கை!

தீப ஒளியில் மிளிரும் இலங்கை!

ஹட்டனில் களைகட்டிய மக்கள் கூட்டம்!

ஹட்டனில் களைகட்டிய மக்கள் கூட்டம்!

    Mobitel Inner 1278

    நடிகை பிரியா பவானி சங்கர் மற்றும் அவரது நீண்ட கால காதலரான ராஜவேல் ராஜ் ஆகிய இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


    பிரியா பவானி சங்கர் பிரியா பவானி சங்கர் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான  "மேயாத மான்" திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா, களத்தில் சந்திப்போம், யானை, திருச்சிற்றம்பலம், பத்து தல, டிமான்டி காலனி 2  என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.


    சமீபத்தில் ரவி தேஜா  நடிப்பில் வெளியான "இருமுடி" திரைப்படத்தில் பிரியா பவானி சங்கரின் கதாபாத்திரமும், அவரது நடிப்பும் அனைவராலும் பாராட்டப்பட்டது.


    பிரியா பவானி சங்கர்  நடித்த ‘டிமான்டி காலனி 3’ படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது. கல்லூரி காலத்து காதல் பயணம்பிரியா பவானி சங்கரும் ராஜ்வேல் ராஜும் கல்லூரி காலத்திலிருந்தே ஒருவரையொருவர் அறிவர் என்பதும், கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக இருவரும் காதலித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


    ஊடகங்கள் மற்றும் பொதுவெளியில் தங்களது காதல் உறவை வெளிப்படையாகவே இருவரும் எப்போதோ உறுதிப்படுத்தியிருந்தனர்.

    சினிமா துறையில் பிசியாக இருந்தாலும் தங்களது தனிப்பட்ட உறவுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்து வந்த இந்த ஜோடி, தற்போது தங்களது உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லத் தயாராகி வருவதாகத் தெரிகிறது.


    நடிகை பிரியா பவானி சங்கர் தனது ராஜவேலு என்பவருடன்  நீண்டகாலமாகக் காதலில் இருந்து வருகிறார். இருவரும் திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது இருவருக்கும் ரகசியமாக திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


    காதலர் ராஜ்வேலுடன் பிரியா பவானி சங்கரின் புகைப்படங்கள் வெளியானதே இதற்கு காரணமாக அமைந்துள்ளது.  பிரியா பவானி சங்கர் மற்றும் அவரது காதலர் ராஜவேல் இருவரும் இணைந்து காணப்படும் இந்த புகைப்படத்தில் பிரியா பவானி சங்கர் முகத்தில் மஞ்சல் பூசப்பட்டிருக்கிறது. மேலும் பிரியா பவானி சங்கர் கையில் மருதானி வைத்துள்ளார். ராஜவேல் பிரியா இருவரும் மாலை அணிந்தபடியும் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதனால் இருவருக்கும் ரகசியமாக குடும்பத்தினர் மத்தியில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டதாக பலரும் கூறி வருகிறார்கள். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.