Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வரும் மக்கள்!

அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வரும் மக்கள்!

யாழில் 'மெட்ரோ பஸ்' (Metro Bus) சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை!

யாழில் 'மெட்ரோ பஸ்' (Metro Bus) சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை!

நுவரெலியாவில் தொடரும் கனமழை!

நுவரெலியாவில் தொடரும் கனமழை!

மரம் ஒன்றில் சிக்கியிருந்த நிலையில்...

மரம் ஒன்றில் சிக்கியிருந்த நிலையில்...

பெரும் துயரத்தில் மக்கள்!

பெரும் துயரத்தில் மக்கள்!

போக்குவரத்துக்கு பெரும் பாதிப்பு!

போக்குவரத்துக்கு பெரும் பாதிப்பு!

ஹட்டனில் கொட்டித்தீர்த்த கனமழை!

ஹட்டனில் கொட்டித்தீர்த்த கனமழை!

ஜனாதிபதி ராஜதந்திர முறையில் செயற்படுகிறார்!

ஜனாதிபதி ராஜதந்திர முறையில் செயற்படுகிறார்!

செம்மணி இன அழிப்பின் சாட்சியம்!

செம்மணி இன அழிப்பின் சாட்சியம்!

மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்!

மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்!

வான் பாய்கிறது விமலசுரேந்திர நீர்த்தேக்கம்

வான் பாய்கிறது விமலசுரேந்திர நீர்த்தேக்கம்

நாங்கள் நியாயமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளோம்!

நாங்கள் நியாயமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளோம்!

சுகயீன விடுமுறை போராட்டம்!

சுகயீன விடுமுறை போராட்டம்!

தீப ஒளியில் மிளிரும் இலங்கை!

தீப ஒளியில் மிளிரும் இலங்கை!

ஹட்டனில் களைகட்டிய மக்கள் கூட்டம்!

ஹட்டனில் களைகட்டிய மக்கள் கூட்டம்!

    Mobitel Inner 1278

    நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடிப்பில், தீபாவளி பண்டிகையையொட்டி நவ.5 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது ராமாயணா திரைப்படத்தின் முதல் பாகம்.


    வெளியான ஐந்து நாட்களில் இந்தியா முழுவதும் 600 கோடி ரூபா வசூலைத் தாண்டியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


    இந்நிலையில் இப்படத்தில் சாய்பல்லவி உருவகப்படுத்தப்பட்டுள்ள விதம் குறித்து நடிகர் முகேஷ் கண்ணா விமர்சித்துள்ளார்.


    படத்தில் சீதை கதாபாத்திரம் தைரியமாக காட்டப்பட்டுள்ள விதம் பாராட்டுகளை பெற்றுவரும் நிலையில், முகேஷ் கண்ணாவின் விமர்சனம் வந்துள்ளது.


    சீதை கதாபாத்திரம் தொடர்பாக பேசியுள்ள அவர்,


    “வால்மீகி ராமாயணத்தில் சீதை சண்டைப்போடுவது போன்ற நிகழ்வுகள் எதுவுமே இல்லை. எனக்குத் தெரிந்தவரை, நான் படித்த வரையில், சீதை ஒருபோதும் யாருடனும் சண்டையிட்டதில்லை. அவர் 'மரியாதா புருஷோத்தம' ராமனின் மனைவி, மிகுந்த பக்தி கொண்ட அவர், தன் கணவருடன் 14 ஆண்டுகள் வனவாசத்திற்குச் செல்ல மனமுவந்து உடன் சென்றார்.


    சீதையின் குணாதிசயத்தையே மாற்றி, அவரை ஒரு போராளியாகச் சித்தரிக்கிறீர்களா? அவர் ஒரு போராளி அல்ல. அவர் ஒரு போராளியாக இருந்திருந்தால், அப்போதே ராவணனுடன் சண்டையிட்டிருக்கலாமே! பிறகு எப்படி அவர் அவ்வளவு எளிதாகக் கடத்தப்பட்டிருக்க முடியும்?


    நாங்கள் இக்கதைகளைக் கேட்டுத்தான் வளர்ந்தோம். சமீபத்தில் கூட, ஒரு 'ராமலீலா' நிகழ்ச்சியில், திடீரென சீதை சண்டையிடுவது, தற்காப்புக் கலைகளில் ஈடுபடுவது, வாள் வீசுவது போன்ற புதிய காட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தன.


    இப்படிச் செய்வதற்கு நீங்கள் வெட்கப்பட வேண்டும்.


    சீதையை ஒரு போராளியாகச் சித்தரிப்பதன் மூலம், நீங்கள் நவீன காலப் பெண்களைக் கவர முயல்கிறீர்கள். சிலர் இதை 'பெண்ணியம்' என்றும் அழைக்கிறார்கள். பெண்ணியம் குறித்து எனக்குப் பெரிய புரிதல் இல்லை, ஆனால் எனக்குத் தெரிந்தவரை, அது பெண்களை வலிமையானவர்களாகக் காட்ட முயல்கிறது.


    பெண்கள் வலிமையானவர்களாக இருக்கலாம், அதை நான் மறுக்கவில்லை. இருப்பினும், ராமாயணத்தில் சீதை என்பவள் சீதை மட்டுமே, நவீன நோக்கங்களுக்காக அவளைப் பயன்படுத்தக் கூடாது. அது தவறானது” என தெரிவித்துள்ளார்.