Nov 17, 2026 - 06:36 PM

Sriyani Dress Point கொழும்பின் நவநாகரிகச் சந்தையில் தனது தனித்துவத்தை நிலைநாட்டும் வகையில், 2026 நவம்பர் 11 அன்று காலை 10 மணியளவில் புதிய காட்சியறையை கொழும்பு 06, வெள்ளவத்தையில் திறந்து வைத்துள்ளது. நவீன ஆடையணி விற்பனைத்துறையில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலான நீண்ட அனுபவத்தைக் கொண்டுள்ள இந்நிறுவனம், சமகால ஆடையணிகள் மற்றும் வீட்டுக்குத் தேவையான பல பொருட்களையும் இப்புதிய காட்சியறையின் மூலமாக கொழும்பிலும் வழங்கவுள்ளது.
மிகவும் கோலாகலமாக இடம்பெற்ற இத்திறப்பு விழாவில், பிரபல இந்திய நடிகை பூஜா ஹெக்டே, கிரிக்கெட் நட்சத்திரங்கள், ஏனைய பல பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வு, தலைநகரில் இந்த பிரபல நவீன ஆடையணி விற்பனை நிறுவனத்தின் வருகையையும், வளர்ச்சிக்கான ஒரு புதிய கட்டத்தின் தொடக்கத்தையும் குறித்து நிற்கிறது.
கண்ணாடிப் பளிங்கு முகப்புடன், தனித்துவமான தோற்றமும், நிலைபேற்றியலை ஊக்குவிக்கும் வண்ணம் கட்டடத்தின் மேற்பரப்பில் பசுமையான சூழலையும் கொண்ட ஒரு கட்டடமாக இது தற்போது வெள்ளவத்தையில் கம்பீரமாகத் தோற்றமளிக்கின்றது. இக்கட்டடம் பல அடுக்கு மாடிகளைக் கொண்டுள்ளதால், ஆடையணிகள், வீட்டுப்பாவனைப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் என அனைத்தையும் ஒரே கூரையின் கீழ் இங்கே பெற்றுக்கொள்ள முடியும்.
வழக்கமான தேவைகள், பண்டிகைக் காலத் தெரிவுகள் மற்றும் திருமண நிகழ்வுகள் என பலதரப்பட்ட தெரிவுகள் இங்கே கிடைக்கப்பெறுகின்றன. மிகவும் இடவசதி கொண்ட வாகனத்தரிப்பிடத்தைக் கொண்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் அனைவரும் தமது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து சௌகரியமாக இங்கே வருகை தந்து, தமக்கு வேண்டியவாறு கொள்வனவுகளை மேற்கொள்ள முடியும்.
இதன் திறப்பு விழாவுக்காகப் பதிவுசெய்த முதல் 100 ரசிகர்களுக்கு, பூஜா ஹெக்டே மற்றும் பிற பிரபலங்களை நேரடியாகச் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்ளும் அரிய வாய்ப்பும் வழங்கப்பட்டது. இது கொண்டாட்டங்களை மேலும் மெருகூட்டியுள்ளது.
இத்திறப்பு விழாவை முன்னிட்டு, “கொழும்பு ஆட்களுக்கு, கொழும்பு 6க்கு” என்ற விளம்பரப் பிரச்சாரமும் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இவ்விளம்பரம் மக்கள் மத்தியில் இப்புதிய காட்சியறை தொடர்பாக பலத்த ஆவலைத் தூண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1993ஆம் ஆண்டு இயங்க ஆரம்பித்த Sriyani Dress Point, கொழும்பில் கால்பதிப்பதற்கு முன்பதாகவே கேகாலை, குருநாகல், கண்டி, மாத்தளை, நீர்கொழும்பு மற்றும் இரத்தினபுரி ஆகிய நகரங்களில் எட்டு காட்சியறைகளைக் கொண்டுள்ளது. இதில் குருநாகல் மற்றும் கண்டி நகரங்களில் தலா இரு காட்சியறைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும், இந்நிறுவனத்தின் சிறப்பிற்கு அங்கீகாரமாக Pinnacle Awards 2025 விருது வழங்கும் விழாவில் 'மிகவும் பிரபலமான சில்லறை விற்பனை நிறுவனம்' என்ற விருதை ஈட்டியுள்ளமை இதன் தனிச்சிறப்பாகும்.
தற்போது வெள்ளவத்தையில் திறந்து வைக்கப்பட்டுள்ள இக்காட்சியறை மூலமாக, தனது நவீன ஆடையணி விற்பனைப் பயணத்தை கொழும்பு மற்றும் மேல் மாகாணத்திற்கு இந்நிறுவனம் விரிவுபடுத்தியுள்ளது. ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் வரவேற்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இக்காட்சியறையின் மூலம், Sriyani Dress Point தன்னை பரந்த வாடிக்கையாளர் தளத்திற்கு மிக அருகில் கொண்டுவந்துள்ளது.
Sriyani Dress Point நிறுவனம் தொடர்பான சுருக்கமான விபரங்கள்:
1993ஆம் ஆண்டு இயங்க ஆரம்பித்த Sriyani Dress Point, கேகாலை, குருநாகல், கண்டி, மாத்தளை, நீர்கொழும்பு, இரத்தினபுரி மற்றும் தற்போது கொழும்பு ஆகிய நகரங்களில் காட்சியறைகளைக் கொண்டு, வாடிக்கையாளர்களின் தேவைகளை மிகவும் சிறப்பாக நிறைவேற்றி வரும் இலங்கையின் பிரபலமான நவநாகரிக ஆடையணி வர்த்தக நிலையமாகும். நிறுவனத்தின் சிறப்பான சேவைகளுக்காக Pinnacle Awards 2025 இல் 'மிகவும் பிரபலமான சில்லறை விற்பனை நிறுவனம்' என்ற விருதை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

































