Nov 17, 2026 - 06:40 PM

தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்னுட்ப தீர்வுகள் வழங்குனரான SLT-MOBITEL, இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத்துடன் (NFSL) கைகோர்த்து, 2026 தேசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகளுக்கு பிரதான அனுசரணை வழங்க முன்வந்துள்ளது. கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட இரு பிரிவுகளில் கொழும்பு டொரிங்டன் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டிகளுக்கு அனுசரணை வழங்க முன்வந்துள்ளதனூடாக, தேசிய கீர்த்தி நாமம், சமூக முன்னேற்றம், இணைப்புத்திறன் மற்றும் இலங்கையில் விளையாட்டு ஊக்குவிப்புக்கு ஆதரவளிப்பது போன்றவற்றில் SLT-MOBITEL காண்பிக்கும் அக்கறை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு வலைப்பந்தாட்டப் போட்டிகளில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் போட்டித் தொடர் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படுவதுடன், 25 மாவட்டங்களின் வலைப்பந்தாட்ட சம்மேளனங்களின் சிறந்த போட்டியாளர்களின் திறமைகளை வெளிக் கொண்டு வரும் வகையில் அமைந்துள்ளது. இந்தப் பெருமைக்குரிய போட்டித் தொடருக்கு வலுவூட்டுவதையிட்டு SLT-MOBITEL பெருமை கொள்வதுடன், தேசத்தின் சிறந்த போட்டியாளர்களுக்கு தமது திறமைகள் மற்றும் விடாமுயற்சியை வெளிப்படுத்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்தப் பங்காண்மையினூடாக, ஆரம்பகட்டத்திலிருந்து முன்னேற்றத்துக்கு வித்திட நிறுவனம் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், வளர்ந்து வரும் திறமைசாலிகளை ஊக்குவித்து, இலங்கையில் விளையாட்டுத்துறையில் பெண்களின் ஈடுபாட்டை மேம்படுத்துவதில் ஆதரவளிக்கவும் SLT-MOBITEL எதிர்பார்க்கின்றது.
நூற்றாண்டு காலப்பகுதிக்கு மேலாக இலங்கையில் வலைப்பந்தாட்டம் விளையாடப்படுவதுடன், தேசிய பாடசாலை பாடவிதானத்தில் ஒரு அங்கமாகவும் அமைந்துள்ளது. மேலும், அதன் குறைந்த மற்றும் சகாயமான உட்கட்டமைப்பு தேவைப்பாடுகளின் காரணமாக, நாடு முழுவதிலும் இந்த விளையாட்டை ஊக்குவிப்பது சுலபமானதாக அமைந்துள்ளது. பரந்தளவில் இந்தப் போட்டிக்கு வரவேற்பு நிலவுவதுடன், சர்வதேச அரங்கிலும் இலங்கை தொடர்ச்சியாக பல வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. இலங்கையின் பின்தங்கிய பகுதிகளின் பெண்களுக்கு இந்த விளையாட்டை பின்தொடர்வதற்கு இந்த சாதனைகள் மேலும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.
இவ்விளையாட்டு வீராங்கனைகளுக்கான பெண்கள் வலுவூட்டலையும் உள்ளடக்கத்தையும் முன்னெடுக்கும் வகையில், வலைப்பந்தாட்டம் என்பது வெறும் ஒரு விளையாட்டிற்கும் மேலானதாக அமைந்துள்ளது. இது சமூக இயக்கவியலையும் பொருளாதார நிலையையும் மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய வழியாக அமைந்துள்ளது. நாட்டின் உள்ளார்ந்த திறமைகளை வளர்த்தெடுப்பதும், வீராங்கனைகள் தமது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான தளங்களை வழங்குவதும், பெண்கள் தமது விளையாட்டுத் திறனை நிரூபிப்பதற்கான வெளிப்பாட்டு இடங்களை உருவாக்குவது இலங்கை வலைப்பந்தாட்டச் சம்மேளனத்தின் (NFSL) நோக்கமாகும்.
மேலும், சிறந்த இளையோர் திறன் மேம்பாட்டில் விசேட கவனம் செலுத்துவதன் மூலம், வலைப்பந்தாட்டத் தரநிலைகளை உயர்த்துவதற்கும், ஆசியாவின் வல்லமைமிக்க அணியாக இலங்கையின் நிலையை மீண்டும் நிலைநாட்டுவதற்குமான இலங்கை வலைப்பந்தாட்டச் சம்மேளனத்தின் (NFSL) மூலோபாயத் திட்டத்திற்கு இந்த அனுசரணை வலுவான ஆதரவளிக்கின்றது.
கனிஷ்ட பிரிவுப் போட்டிகள் 2026 நவம்பர் 21 முதல் 22 வரை நடைபெறவுள்ளதுடன், இளம் தேசிய அணிக்கு வீரர்களை தெரிவு செய்வதற்கான களமாகவும் அமைந்திருக்கும்.
தேசிய பெருமை மற்றும் இளைஞர் விருத்தி ஆகியவற்றில் பகிரப்பட்ட நோக்குடன், SLT-MOBITEL இன் ஆதரவினூடாக, இலங்கையின் அடுத்த தலைமுறை வலைப்பந்தாட்ட நட்சத்திரங்களை வெளிக்கொண்டு வந்து, அவர்களின் முன்னேற்றத்திற்கு ஆதரவளிக்க எதிர்பார்க்கப்படுகின்றது.

































