Nov 17, 2026 - 08:11 PM

டெல்லியில் நேற்று நடைபெற்ற சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் விஜய், இந்திய தேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தியின் இல்லத்தில் பல ஆண்டுகளாகப் பணியாற்றும் பெண் ஒருவரின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி வைத்துள்ளார்.
புத்தக வெளியீட்டு நிகழ்வின் போது, பிரியங்கா காந்தி தனது இல்லத்தில் கடந்த 22 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் பெண் பணியாளரை முதலமைச்சர் விஜய்க்கு அறிமுகப்படுத்தினார்.
அப்போது, தமிழக முதலமைச்சருடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே அந்தப் பெண்ணின் நீண்ட நாள் ஆசை என்று அவர் தெரிவித்தார்.
இதனைக் கேட்ட முதலமைச்சர் விஜய், எந்தவிதத் தயக்கமுமின்றி மிகுந்த மகிழ்ச்சியுடன் அந்தப் பெண்ணுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன், மிகவும் அன்பாக நலம் விசாரித்து தனது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இந்தச் சம்பவம் விழாவில் கலந்துகொண்ட பலரது கவனத்தையும் ஈர்த்ததுடன், இணையத்தில் தற்போது அதிகம் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.

































