Nov 17, 2026 - 09:52 PM

ஐபிஎல் 2027 தொடருக்கான தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் முழுப் பட்டியலை சென்னை சுப்பர் கிங்ஸ் (CSK) அணி வெளியிட்டுள்ளது.
இதில் அணியின் முன்னாள் தலைவர் எம்.எஸ். தோனி வீரர் பட்டியலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
எனினும், அவர் அணியின் ஆலோசகராகப் (Mentor) புதிய பொறுப்பை ஏற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதன் மூலம், ஐபிஎல் தொடரில் வீரராக அவரது பயணம் அதிகாரப்பூர்வமாக நிறைவுக்கு வந்துள்ளது.
தக்கவைக்கப்பட்ட 19 வீரர்களின் முழுப் பட்டியல்:
அகீல் ஹொசைன், அன்ஷுல் கம்போஜ், ஆயுஷ் மாத்ரே, டெவால்ட் பிரேவிஸ், குர்ஜப்நீத் சிங், ஜாக் எட்வர்ட்ஸ் (வர்த்தகம் மூலம்), ஜேமி ஓவர்டன், கார்த்திக் சர்மா, லியாம் லிவிங்ஸ்டன் (வரத்தகம் மூலம்), முகேஷ் சௌத்ரி, நூர் அகமது, ராகுல் சாஹர், ராமகிருஷ்ணா கோஷ், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சர்பராஸ் கான், சிவம் துபே, ஷ்ரேயஸ் கோபால் மற்றும் உர்வில் படேல் ஆகியோர் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியால் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.
விடுவிக்கப்பட்ட 11 வீரர்களின் முழுப் பட்டியல்:
எம்.எஸ். தோனி (இனி அணியின் ஆலோசகராகச் செயல்படுவார்), அமன் கான், டியான் ஃபாரெஸ்டர், குல்தீப் யாதவ், மேக்னெயில் நொரோன்ஹா, மாட் ஹென்றி, மேத்யூ ஷார்ட், ஆகாஷ் மத்வால், பிரசாந்த் வீர், ஸ்பென்சர் ஜோன்சன் மற்றும் சாக் பௌல்க்ஸ் ஆகிய வீரர்கள் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான வீரர்கள் பரிமாற்றத்தின் (Trade) மூலம் லியாம் லிவிங்ஸ்டன் (ரூ. 6 கோடி) மற்றும் ஜாக் எட்வர்ட்ஸ் (ரூ. 3 கோடி) ஆகியோர் சென்னை அணிக்கு வந்துள்ளனர்.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் புதிய வீரர்களுடன் களமிறங்கத் தயாராகி வரும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் வசம் தற்போது ரூ. 28.05 கோடி மீதமுள்ள நிதி உள்ளது.
வெற்றிடமாகவுள்ள 6 இடங்களை நிரப்புவதற்காக டிசம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ள மினி ஏலத்தை அணி நிர்வாகம் எதிர்நோக்கியுள்ளது.

































