Nov 21, 2026 - 04:22 PM

இந்தோனேசியாவுக்கு அருகில் உள்ள தீவுகளில் ஒன்றான பெண்டா தீவில் இன்று (21) பிற்பகல் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவில் 6.8 மெக்னிடுயிட்டாக பதிவாகியுள்ளதாக சர்வதேச புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று பிற்பகல் 3.12 மணியளவில் 156 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு சுனாமி ஆபத்து எதுவும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்புகள் பாதுகாப்பானதாக உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் எதுவும் இதுவரை வௌியாகவில்லை.
குறித்த தீவில் அண்மையிலும் 6.6 மெக்னிடுயிட் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.
































