Nov 23, 2026 - 05:27 PM
By கண்டி நிருபர் ராஜ்
By கண்டி நிருபர் ராஜ்

கம்பளை இந்துக் கல்லூரியில் தரம் 7 இல் கல்வி கற்கும் மாணவன் சாந்தகுமார் சபிசன், மத்திய மாகாண சோட்டோகான் கராத்தே சம்பியன்ஷிப் (Shotokan Karate Championship) போட்டியில் முதலிடம் பெற்றுத் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகி கம்பளை மண்ணுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
கல்லூரியின் அதிபர் நேரு வழிகாட்டலிலும், பயிற்றுவிப்பாளர் ஆசிரியர் எஸ்.பி. சந்திரமோகன் (ஜே.பி.) நெறிப்படுத்தலிலும் கண்டியில் நடைபெற்ற இப்போட்டியில், 40 கிலோகிராமுக்கு மேற்பட்ட எடைப் பிரிவில் (40+ kg) பங்கேற்ற அவர் தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.
தேசிய மட்டப் போட்டிக்குத் தகுதி பெற்றுப் பாடசாலைக்குப் பெருமை சேர்த்த குறித்த மாணவனைக் கௌரவிக்கும் நிகழ்வு, கம்பளை இந்துக் கல்லூரி அதிபர் நேரு தலைமையில் அண்மையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

































