Nov 23, 2026 - 10:32 PM

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் எதிர்வரும் 25 ஆம் திகதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழகத் தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு அறிவித்துள்ளது.
அதன் இணைத் தலைவர் தம்மிக்க எஸ். பிரியந்த தெரிவிக்கையில்,
அன்றைய தினம் வேலைநிறுத்தத்துடன் கூடிய ஆர்ப்பாட்டத்தையும் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இன்று (23) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன் எதிர்வரும் டிசம்பர் 01 மற்றும் 02 ஆம் திகதிகளில் அடையாள வேலைநிறுத்தத்துடன் கூடிய பாரிய ஆர்ப்பாட்டப் போராட்டத்தை நடத்துவதற்கும் நாம் தற்போது திட்டமிட்டுள்ளோம் எனவும் கூறியுள்ளார்.

































