Nov 25, 2026 - 12:51 PM
By நுவரெலியா நிருபர் செ.திவாகரன்
By நுவரெலியா நிருபர் செ.திவாகரன்

கினிகத்தேனை கடவல பகுதியில் கனரக வாகனமொன்று இன்று (25) அதிகாலை பிரதான வீதியிலிருந்து விலகி சுமார் 50 அடி ஆழமுள்ள செங்குத்தான பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் இதில் சாரதி காயமடைந்துள்ளதாக கினிகத்தேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பிலிருந்து ஹட்டன் நகர் நோக்கி பயணித்த கனரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
12 டன் புன்னாக்கை ஏற்றிச் சென்ற ஒரு கனரக வாகனமே சுமார் 50 அடி ஆழமுள்ள செங்குத்தான பள்ளம் கொண்ட தேயிலைத் தோட்டத்தில் விழுந்து நின்றதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் சாரதி லேசான காயங்களுடன் கினிகத்தேனை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், குறித்த கனரக வாகனத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேக கட்டுப்பாட்டை இழந்தைமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் கினிகத்தேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

































