Nov 25, 2026 - 01:13 PM

தேசிய மக்கள் சக்தியின் (NPP) அதிகாரத்திலுள்ள கொலொன்ன பிரதேச சபையின் 2027-ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
ஆதரவாக 9 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில், தேசிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்டம் தோல்வியடைந்துள்ளது.
கொலொன்ன பிரதேச சபையின் 2027-ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம், திசைகாட்டி வசம் அதிகாரம் உள்ள பிரதேச சபையின் தவிசாளர் சம்பத் குணசிங்க தலைமையில் இன்று முதன்முறையாகச் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
2026-ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திலும் தேசிய மக்கள் சக்தி அங்கு தோல்வியடைந்திருந்தது.
கொலொன்ன பிரதேச சபையில் எதிர்க்கட்சிக்கு 10 ஆசனங்களும், ஆளும் கட்சிக்கு 9 ஆசனங்களும் காணப்படுகின்றன.
எவ்வாறாயினும், தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பில் அதிக வாக்குகளைப் பெற்று, குறைந்த ஆசனங்களை வென்றிருந்த தேசிய மக்கள் சக்தியிலிருந்து தவிசாளர் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

































