Nov 25, 2026 - 07:40 PM

அமெரிக்கா தனது மிகப்பெரிய வர்த்தக பங்காளிகளான சில நாடுகள் மீது புதிய இறக்குமதி தீர்வை வரிகளை அறிவித்துள்ளது.
உற்பத்தித் துறைகளில் காணப்படும் கட்டமைப்பு ரீதியான அதிகப்படியான கொள்ளளவு மற்றும் உற்பத்தி தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட 'பிரிவு 301' (Section 301) விசாரணையைத் தொடர்ந்து இந்த வரிகள் விதிக்கப்படுகின்றன.
இந்த விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட பொருளாதார நாடுகளாக சீனா, ஐரோப்பிய ஒன்றியம், சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, கம்போடியா, தாய்லாந்து, கொரியா, வியட்நாம், தாய்வான், பங்களாதேஷ், ஜப்பான் மற்றும் இந்தியா ஆகியவை உள்ளடங்குகின்றன.
வெவ்வேறு நாடுகளுக்கும், வெவ்வேறு பொருட்களுக்கும் ஏற்ப மாறுபட்ட வரி விகிதங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.
இதில் சீனா அதிகபட்சமாக "40% வரையிலான" வரி விகிதத்தை எதிர்கொள்கிறது. அதனைத் தொடர்ந்து வியட்நாம் 35% வரையிலான வரியையும், ஏனைய நாடுகள் 20% அல்லது 25% வரியையும் எதிர்கொள்கின்றன.
எவ்வாறாயினும், ஜனாதிபதி ட்ரம்ப் முன்னர் ஒப்புக்கொண்ட வரி உச்சவரம்புகள் காரணமாக இவற்றில் சில வரிகள் நடைமுறையில் குறைக்கப்படும்.

































