Nov 25, 2026 - 09:11 PM

பிரதமருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் சாதகமான பதில் கிடைக்காத காரணத்தினால், எதிர்வரும் 30-ஆம் திகதி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
இதற்கமைய, அன்றைய தினம் சுகயீன விடுமுறையைப் பதிவு செய்து தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

































