Nov 25, 2026 - 10:02 PM

நிலவும் மழையுடனான வானிலையால் தெதுறு ஓயா நீர்த்தேக்கத்திற்கு வந்து சேரும் நீரின் அளவைக் கட்டுப்படுத்துவதற்காக, அதன் ஆறு வான்கதவுகள் தலா ஒரு அடி வீதம் திறக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, தற்போது வினாடிக்கு 4,200 கன அடி நீர் தெதுறு ஓயாவிற்குள் வெளியேற்றப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் கிடைக்கும் மழைவீழ்ச்சி மற்றும் நீர்த்தேக்கத்திற்கு வந்து சேரும் நீரின் அளவிற்கு ஏற்ப, திறக்கப்பட்டுள்ள வான்கதவுகளின் எண்ணிக்கை மேலும் மாறுபடக்கூடும் என நீர்ப்பாசனப் பணிப்பாளர் (நீர் முகாமைத்துவம்) குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக, நீர்த்தேக்கத்திற்குக் தாழ்நிலப் பகுதியில் தெதுரு ஓயாவின் இரு மருங்கிலும் வசிக்கும் மக்கள் ஆற்றின் நீர்மட்டம் உயர்வடைவது குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும், நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகளினால் வெளியிடப்படும் அறிவிப்புகளுக்கு அமையச் செயற்படுமாறும் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

































