Nov 25, 2026 - 11:54 PM

அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்கவைச் சந்தித்துக் கலந்துரையாடியமை குறித்துத் தாம் மகிழ்ச்சியடைவதாக அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் குறிப்பிட்டுள்ளார்.
தனது 'X' (எக்ஸ்) கணக்கில் பதிவொன்றையிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வொஷிங்டனில் பணியாற்றிய காலப்பகுதி குறித்து சமரசிங்க தெரிவித்த கருத்துக்களைப் பாராட்டியதாகவும், அவரது பதவிக் காலத்தில் அமெரிக்க - இலங்கை உறவுகளை வலுப்படுத்துவதற்கு அவர் எடுத்த முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்ததாகவும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகாலப் பங்குடைமை குறித்து இவ்வாறு கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வது எப்போதும் நல்லதொரு விடயம் எனவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த சமரசிங்க 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2026-ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் திகதி வரை சுமார் 5 வருட காலத்திற்கு அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராகப் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

































