Nov 26, 2026 - 08:02 AM

நிலவும் மழையுடனான வானிலையுடன் தெதுறு ஓயா மற்றும் தப்போவ நீர்த்தேக்கங்களின் பல வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று (25) இரவு வேளையில் தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் எட்டு வான் கதவுகளும் தலா இரண்டு அடி வீதம் திறக்கப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன் மூலம் வினாடிக்கு 11,200 கன அடி நீர் தற்போது தெதுறு ஓயாவுக்கு வெளியேற்றப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக, நீர்த்தேக்கத்திற்குக் கீழ்ப்பகுதியில் தெதுறு ஓயாவை அண்டி வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, விக்டோரியா நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகளும், தப்போவ நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகளும், லுணுகம்வெஹெர நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.
அத்தனகலு ஓயாவின் நீர்மட்டமும் தூனமலே பகுதியில் உயர்வடைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

































